பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை தந்த ஒளி 9 "இங்கேயே கிக்கிறேன். வீட்டுக்குள்ளே இருட்டா இருக்கு” என்பான். - இருண்ட அறையைக் கண்டால் அவனுக்குப் பயம். ஊர் பேர். அறியாத ஒரு கருப்பைக்குள்ளே அவன் பட்ட துன்பத்தின் விளைவோ என்னவோ இந்தப் பயம் அவனுக்கு எப்பொழுதும் உண்டு. செங்கப்பன் காத்திருந்தான். கிழவி கட்டிலவிட்டு எழுந்திருக்கவேயில்லை. அவன் போய்விட்டான். கான்கு நாட்கள் ராமாத்தாள் எழுந்திருக்கவில்லை. படுத்த படுக்கையாகக் கிடந்தாள். பக்கத்து வீட்டுப் பெண்ணுெருத்தி கஞ்சி வைத்துக் கொடுத்தாள். அதைக் கூட அவள் சாப்பிடவில்லை. நான்கு நாட்களும் காலேயிலே சொங்கப்பன் அவள் வீட்டுத் திண்ணைக்கு வருவதிலே தவறவில்லை. நான்காவது காள்தான் அவளுக்கு உடம்பு சரியில்லை என்று அவ லுக்குப் பட்டிருக்கிறது. ஐந்தாம் காட் காலையிலே ராமாத்தாள் அடிக்கடி, "சொங்கப்பா, சொங்கப்பா” என்று கூப்பிட்டுக்கொண் டிருந்தாள். அவன் திண்ணேக்கு வந்ததை அறிந்ததும், மெதுவாகக் கட்டிலேவிட்டு இறங்கி வெளியே வந்தாள். கஞ்சி கூடக் குடிக்காமல் கிடந்ததால் கால்கள் தள் ளாடின; தலை சுற்றியது. அவள் அப்படியே மயக்கம் போட்டுக் கதவின் மேல் சாய்ந்தாள். - சொங்கப்பன் அவளைத் தூக்கிக்கொண்டுபோய்க் கட் 4.லில் படுக்க வைத்தான். கொதிக்கும் அவளுடைய உடம் *ன் பரிசம் அவனுக்குச் சொல்ல முடியாத ஏதோ ஒர் உணர்ச்சியைக் கொடுத்தது. தான் அவளைத் துரக்கிச் செல்வதாக அவன் உணரவில்லை; எட்டு மாதக் குழந்தை