பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தங்கச் சங்கிலி -. யையும் சொல்லி முடியாது. வள்ளியாத்தாளிடம் முன்பிருந்ததைவிட அவனுக்கு அன்பு பலமடங்கு அதிகரித்தது. இருந்தாலும் இவற்றையெல்லாம் அவள் வெளிய்ே காட்டிக்கொள்ளவில்லை. அவன் மனதிற்குள்ளேயே சந்தோஷப்பட்டுக் கொண்டு புருக்காட்டுவலசிற்குத் திரும்பிவிட்டான். : வள்ளியாத்தாள் காட்டுப்பாளையம் வந்ததி லிருந்து சின்னன் இன்பக் கடலில் முழுகியிருந்தான். வயிற்றுக்குச் சோறு தேடுவதிலே எத்தனை சிரமப் பட்டாலும் அதையெல்லாம் அவளைப் பார்த்தவுடன் மறந்துவிடுவான். 'என் மகனுக்கு உயிர்ப் பிச்சை கொடுத்த அந்த தெய்வத்துக்கு நல்ல ஆண் குழந்தை தான் பிறக்கும்” என்று அடிக்கடி சொல்லிக்கொண் டிருந்தான். அவன் வ்ாக்குபடியே ஆண் குழந்திை பிறந்துவிடவே அவன் உள்ளம் பூரித்தான். இப்பொழுதெல்லாம் சின்னன் எங்கெங்கோ தினக்கூலியாக வேலை செய்து வந்தான். சொங்கப்ப கவுண்டர் தமது நிலங்களையெல்லாம் பங்காளிகளுக் குள் எதிர்பாராது ஏற்பட்ட வழக்கிலே இழந்து விட்டார். கோர்ட்டுச் செலவு வக்கீல் செலவு என்று அவர் சொத்தெல்லாம் கரைந்து போயிற்று. அதனல் சின்னன் இப்படி வேறிடத்திலே வேலைக்காக அலைய வேண்டியதாயிற்று. கையிலே பொருளிருந்த காலத்திலேயே வள்ளி யாத்தாளுக்குக் கல்யாணத்தை முடித்துவிட்டதால் சொங்கப்ப கவுண்டர் அவளுக்கு வழக்கமாகச் செய்ய வேண்டிய சீர்சிறப்புக்களையெல்லாம் தமது சக்திச் கேற்றபடி திருப்திகரமாகச் செய்திருந்தார். காள்ை மாடுகள் இரண்டு மகளுக்கு அனுப்பி வைத்தார் நல்ல வில்லமைந்த சூட்டு வண்டியும், சீராக; கொடுத்தார். மற்ற சீர் வரிசைகளும் நாலு ப்ே மெச்சும்படிதான் செய்தார். இன்றைய நிலமையர்