பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தங்கச் சங்கிலி தோஷமாக வைத்திருக்க வேண்டுமென்று அவனுக்கு ஒரே ஆவல். கமலாவுக்குப் பட்டுச் சேலை வாங்இ; கொடுக்க வேண்டும். புது மாதிரி கழுத்துச் சங்கில் வாங்கிப் போட வேண்டும் என்று அவனுக்கு இந்த ஐந்து ஆண்டுகளாக ஆசை. ஆனால், அவனுடைய சம்பளம் மாதம் முழுவதும் குடும்பச் செலவிற்குத் தான் ஒரு மாதிரி சரிக்கட்டி வந்தது. ஒரு நாளைக்கும் போல இரண்டு நாள் சினிமாவிற்குப் போய்விட்டால் அந்த மாதக் குடும்பச் செலவில் வேறு ஏதாவது ஒர் அம்சத்தை வெட்டிவிட வேண்டும். இல்லாவிடில் கடன் ஏற்பட்டுவிடும். இந்த நிலையில் அவனுடைய ஆசை நிறைவேறுவதற்கு வகை ஏது? அது அi னுக்குத் தீராத வருத்தத்தைக் கொடுத்தது. கமலா, உனக்கு ஒரு பட்டுச் சேலை வாங்கிக் கொடுக்கக்கூட எ_ன் ன ல் முடியவில்லை. எனக்கு மனைவியாக வந்து நீ என்ன சுகம் கண்டாய்?’ என்று அவன் அடிக்கடி ஏக்கத்தோடு கூறுவான். எலுமிச்சம் பழம் போன்ற அவள் நிறத்திற்கும், ஒல்லியான அழகிய மேனிக்கும் கிளிப் பச்சை நிறத்திலே ஜரிசை போட்ட பட்டுப் புடவை உடுத்துக்கொண்டால் மி நன்ருக இருக்கும் என்பது அவன் கருத்து. * கமலா தனக்குப் பட்டுச்சேலை இல்லையென்று வருத்தம் அடையவில்லை. சந்திரனுடைய அன்ட் ஒன்றே அவளுக்கும் போதும். எனக்குப் பட்டு: சேலை எதற்கு ? உங்கள் அன்பு கிடைத்திருக்கிறதே அதே பெரிய பாக்கியம். அதைவிட எ ன க்கு ஒன்றுமே வேண்டியதில்லை ” என்று அவள் தழு தழுத்த குரலில் தனது நீலவிழிகளிலே அன்பின் ஒளி வீச உணர்ச்சியோடு பதில் அளிப்பாள். அந்தப் பதில் சந்திரனுக்கு ஒருவாறு ஆறு, லளித்தாலும் மறு கணத்திலே அவ்ன் தனது தி னம்பிக்கையற்ற நிலைய்ை எண்ணி உள்ளுக்குள்ே