பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தங்கச் சங்கிலி கமலா அதை உணர்ந்துகொள்ளாமல் இருப் பாளா? உடனே அவள், இதைப்பற்றி எதற்காக நீங்கள் கவலைப்படுகிறீர்கள் ? ஏதோ கடவுள் கொடுத்த உத்தியோகம் இருக்கிறது. கிடைக்கிற சம்பளத்தைக் கொண்டு சுகமாகக் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிருேம். அவைசியமாக அதிக ஆசை எதற்கு ?’ என்று கூறி அவன் வருத்தத்தைப் போக்க முயலுவாள். இந்த நிலையிலே சந்திரனுக்கு வேருெரு பெரிய நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுவிட்டது. சம்பள உயர்வு கிடைக்காததோடு உத்தியோகத்திற்கே ஆபத்து வந்தது. முதலாளிக்குச் சந்திரனல் அதிகப் பிரயோஜனம் இருக்கவில்லை. அவருடைய வியாபா ரத்திற்குப் புதுப்புது யோசனையோடு காரியம் செய் யும் உத்தியோகஸ்தர்கள் தேவை. வெறும் கணக்குப் பதிகின்ற குமாஸ்தாக்களை வைத்துக்கொண்டு அவர் சொந்தமாகத் தயாரிக்கும் மருந்துகளை ஏராளமாக் விற்க முடியாது. மக்களின் உள்ளத்தைக் கவருகிற மாதிரி திறமையாக விளம்பரங்களும் மற்ற ஏற்பாடு களும் செய்யக்கூடிய மனிதர்கள் அவருக்கு வேண்டும். அதனால் அவர் சந்திரனைக் கூப்பிட்டு, உனக்கு ஒரு மாதம் முன்னறிக்கை கொடுக்கிறேன். அடுத்த மாதத்திற்குமேல் வேறிடம் தேடிக்கொள்’ என்று. கூறிவிட்டார். சந்திரன் தான் பத்து வருஷமாக வேலை செய்து, வந்ததைப்பற்றிக் கூறிக் கொஞ்சம் வாதாடினன். 'ரொம்ப காலமாக என்னிடம் வேலை பார்ப்பதை நினைத்துத்தான் இதுவரையில் யோசனை பண்ணி னேன். ஆனல், என்ன செய்கிறது? எனக்கு வெறும், கணக்கெழுதுவதற்குமட்டும் தனியாக ஒருகுமாஸ்தா வேண்டியதில்லை. புதிய புதிய யுக்திகள் கண்டுபிடித்து