பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிமாலய மருந்து 45 வியாபாரத்தைப் பெருக்க உதவும் ஊழியர் ஒருத்தர் வேண்டியிருக்கிறது” என்று நிலைமையை எடுத்தியம் பினர் முதலாளி. அவர் கூறியது மெய்தான். அவர் வியாபாரம் மிகப் பெரிய அளவில் நடக்கவில்லை. நடக்கிற அள விற்கு இரண்டு மூன்று குமாஸ்தாக்கள் வைத்துக் கொண்டால் கட்டுப்படியாகாது. வியாபாரம்பெருகி யிருந்தால் அவர் சந்திரனைக் கணக்கு எழுதுவதற் கென்றே வைத்துக் கொண்டிருப்பார். அதற்கு நிலைமை இன்னும் ஏற்படாததால் கணக்குப் பதியவும் திறமையாகச் சரக்குகளை விற்பதற்கு உதவவும் தகுதியுள்ள ஒருவரை மட்டும் நியமித்துக் கொள்ள அவர் முடிவு செய்திருந்தார். சந்திரன் விசனத்தோடு வீடு வந்து சேர்ந்தான். ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தன் மனைவியிடம் எப்படிக் கூறுவதென்று கலங்கினன். ஆனல் எப்படியும் கூறித்தானே ஆகவேண்டும்? கடைசியில் கமலாவுக்கு விஷயம் தெரிந்தபோது அவள் சந்திரனுக்குத் தன்னல் முடிந்தவரை ஆறுதல் கூறத் தொடங்கினுள், இன்னேர் இடத்திலே வேலை கிடைக்காமலா போகும்? எதற்காக் வருத்தப் படுகிறீர்கள்?’ என்று சிரித்த முகத்தோடு கூறினுள். “எனக்கு மூளையில்லை என்றிருந்தாலும் இத்தனை கவலைப்படமாட்டேன். வியாபாரத்தைப் பெருக்குவ தற்கு நல்ல நல்ல தந்திரங்களெல்லாம் எனக்கு உதய மாகின்றன. முதலாளிக்கு அவற்றை எடுத்துக் கூறி எப்படியெல்லாம் செயல் முறையில் அவற்றைக் கொண்டுவரலாம் என்று விளக்குவதற்குத்தான் தைரியம் ஏற்படுகிறதில்லை. அதனுல் அவருக்கும் என்னுல் பிரேயோஜனம் இல்லை. என்னுடைய