பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை தந்த ஒளி 18 கவும் இப்பொழுது முன் வந்தார்கள். சொங்கப்பா, என் பெண்ணேக் கட்டிக்கொள். நீ தனியாக இருந்தால் உனக்கு யார் சமையல் செய்து போடுவார்கள்?' என்ருர்கள். சொங்கப்பனுக்குத் தன்னைப் பற்றிய கினேப்பே இல்லை. கிராமத்திலே யாராவது இறந்துபோனல் அந்த வீட்டில் பல நாட்களுக்குச் சமையல் கடக்காது. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அந்த விட்டாருக்கு உண்வு தயாரித்துக்கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்த மாதிரி யாராவது கொண்டுவரும் உணவை ஒரு வேளை உண்டும் உண்ணுமலும் சொங்கப்பன் ஆழ்ந்த யோசனையிலிருக் தான். ராமாத்தாளுக்குப் புண்ணியம் சம்பாதிக்க வேண் டும் என்ற ஒரே ஆசை அவனைப் பிடித்துக்கொண்டது. மோட்சம் எப்படிக் கிடைக்கும் என்று பல பேரிடம் கேட்டுப் பார்த்தான். ஒருவருக்கும் அதற்குப் பதில்கூறத் தெரியவில்லை. யாரோ ஒருவர், மோட்சம் எப்படிக் கிடைக்கும்? சாமி கொடுத்துத்தான் கிடைக்கும். சாமி மனசு வெச்சா கடக்கும்” என்று சொன்னர். அவரிடம் திருப்பித் திருப்பி அவன் என்ன என்னவோ கேட்டான். அதற்கு மேலே சொல்ல அவருக்குத் தெரியவில்லை. ஆனல் சொங்கப்பனுக்கு அதுவரையில் தோன்ருத ஒா உபாயம் கிடைத்தது. ராமாத்தாள் இறந்த ஏழாவது நாள் அவன் சந்தைப்பேட்டைக்குச் சற்றுத் தள்ளியிருந்த கோயிலுக்குப் போஞன். கோயில் அர்ச்சகரிடம், பணங் கொடுத்தா சாமி மோட்சங் கொடுப்பாரா?” என்று கேட்டான். கோயிலுக்குத் தர்மம் பண்ணினல் புண்ணியம் உண்டு' என்ருர் அர்ச்சகர். - மோட்சம் கிடைக்குமா சொல்லுங்கோ?' என்று அந்தக் கேள்வியையே திருப்பிக் கேட்டான்.