பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிமாலய மருந்து 55 "அது இனி முடியாது. தலையிலே பலத்த ஆடி நட்டிருக்கிறதல்லவா? அதனால் என் மூளை குழம்பு நிறது போலத் தோன்றுகிறது” என்ருன் பக்கிரி. "உன் மருந்தால் நான் வாழ்க்கையிலே பெரிய வெற்றி அடைந்தேன். அதைச் செய்யும் முறையை ாவது எனக்குச் சொல்லிக் கொடு” என்று சந்திரன் இரங்கிய குரலில் கேட்டான். பக்கிரியின் முகத்திலே புன்னகையின் சாயல் படர்ந்தது. விளையாட்டுப் பொம்மை யொன்று வேண்டுமென்று ஆவலோடு கேட்கும் குழந்தையை நோக்கிப் பேசுவதுபோல அவன் சந்திரனைப் பார்த் திப் பேசினன்; அவன் வாயிலிருந்து கடைசித் நீடவையாகக் கீழ்க்கண்ட வார்த்தைகள் வெளி iாயின. அய்யா! அந்த மருந்தின் ரகசியம் உனக்குத் தெரியாதா? உண்மையிலே அதில் ஒன்றுமே இல்லை. வாயில் ஊற்றினல் சுறுசுறுவென்று இருப்பதற்காகச் சுக்கு, லவங்கம், பச்சைக் கற்பூரம், மிளகு இப்படி ஏதாவது சில சரக்குகளைச் சேர்த்துக் கஷாயம் செய் வேன்! அவ்வளவுதான், தன்னம்பிக்கை ஏற்படுவ தற்கு அதிலே ஒன்றும் இல்லை. எல்லாம் நம்பிக்கை தான்.” அதற்கு மேலே அவன் பேசவில்லை.