பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை முத்துசாமி மறுபடியும் கைதியாகச் சிறைக்குள்ளே புகுந்தபோது அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் முழுகிவிட்டார்கள். அவன் விடுதலையாகி ஒரு மாதந்தா குயிற்று. அதற்குள்ளே எதற்காக அவன் மீண்டும் சிறைக்குள்ளே வரவேண்டும்? அவன் திருடனல்ல; குடிகார னல்ல. உண்மையில் அவனேப்போல நல்ல கடத்தையுடை யவர்கள் அந்த ஜெயிலுக்குள்ளே யாரும் இருந்ததில்லை. அவன் தோற்றத்திலே கண்ணியமிருந்தது. அப்படியிருக்கி அவன் எதல்ை மறுபடியும் சிறை புக தேர்ந்தது? இந்தக் கேள்வி எல்லோருடைய உள்ளத்திலும் அவனைப் பார்த்த வுடன் எழுந்தது. ஆனல் அவனிடம் இதைக் கேட்க ஒரு வருக்காவது துணிச்சல் வரவில்லை. - முத்துசாமி ஒரு மாதத்திற்கு முன்புவரை அந்தச் சிறைக்குள்ளே இருந்தபோது யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டான். தனக்கு விதிக்கப்பட்டிருந்த வேலை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதைப்பற்றி முணுமுணுக் காமல் மெளனமாகச் செய்துகொண்டிருப்பான். இரவு பகல் எந்த நேரமாலுைம் அவன் வேலை செய்வதற்குப் பின் வாங்குவதில்லை. 'இந்த வேலைகளை யெல்லாம் இன்றைக்கே முடித்தாக வேண்டும்” என்று ஜெயில் வார்டனே ந்ெ: அதிகாரிகளோ அவனிடம் சொல்லவேண்டியதுதான் தாம் தம், அவன் உடனே செய்யத் தொடங்கிவிடுவான். 6 சார யந்திரம் உயிரற்றதுபோலக் கிடக்கிறது; ஆளுல் ஒரு பித்தானே அழுத்தியதும் அது மடமடவென்று சுழலத் தொடங்கிவிடுகிறது. மறுபடியும் பித்தானே மேலே தட்டும்