பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந ம்பி க் ைக 'நம்பிக்கைக்கு ஒரு மஹத்தான சக்தி இருக கத்தான் செய்கிறது; அதை நாம் மறுக்க முடியாது” என்று வாதாடினர் முருகப்பசாமி. - "நான் அதை ஒப்புக்கொள்ள முடியாது; பகுத் தறிவு ஒன்றுதான் நமக்கு வேண்டியது. இந்தக் குருட்டு நம்பிக்கையால்தான் நமது தேசமே கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய்விட்டது” என்று ஆத்திர மாய்ப் பேசினர் இளங்கீரனர். "நம்பிக்கை குருடாக இருக்கலாம். ஆனல் கண்ணை மூடிக்கொண்டு சாதிக்கக்கூடிய சில கனியிங் களைக் கண்ணைத் திறந்துகொண்டு செய்ய முடியாது: அதைத்தான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.” . இப்படிப் பிடிவாதம்ாகத் தமது கொள்கை:ை முருகப்பசாமி நிலைநாட்ட முயன்ருர். - "அந்தக் கதையெல்லாம் என்னிடத்திலே வேண். டாம். கதை கேட்டுக் கேட்டுத்தான் உலகம் ஏமாந்து ப்ோகிறது. உலகத்தை ஏமாற்றிப் பிழைத் கச் சில சுயநலக்காரர் செய்கின்ற சூழ்ச்சி இது; என்று மேலும் ஆத்திரங்கொண்டு இளங்கீரனர் உரையாடினர். 'நம்பிக்கை ஒரு பெரிய புதிர்' என்று திடீ. ரென்று வேறெரு குரல் கேட்டது. முருகப்பசாமியும் இளங்கீரனரும் சட்டென்று குரல் வந்த பக்கம் ரும்பிப் பார்த்தார்கள். அங்கே மீசையும் தாடி, மாக ஒரு மனிதர் உட்கார்ந்து கொண்டிருந்தார் தங்களுடைய விவாதத்திலேயே ஆர்வத்தோடு ஈடு