பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கை 61 சல்லிக் காசைக்கூட அவன் தன் வீட்டிற்குக் கொண்டுவரமாட்டான். சங்கிலிக் கறுப்பண்ணனுடைய கோயில் பக்கம் இரவு நேரத்தில் யாருமே போகமாட்டார்கள். கிாடுகளின் மத்தியிலே அது ஊரைவிட்டுத் தள்ளித் தனியாக இருந்தது. அங்கே நாட்டப் பெற்றிருக்கும் பெரிய பெரிய வேல்களிலுள்ள மணிகள் இரவெல் லாம் கலகலவென்று ஒலிக்குமென்றும், செங்கல்லா லும் காரையாலும் உருவாக்கபபட்டிருக்கும் பூதா காரமான குதிரை வாகனங்கள் கர்ஜனை புரியு மென்றும் மக்கள் கூறுவதுண்டு. அதனால் அந்தப் பக்கத்திற்கே இரவில் ஒருவரும் காலெடுத்து வைப்ப தில்லை. ராமசாமிக்கு இது வசதியாக இருந்தது. இருட்டு நேரத்திலே அவன் அங்கு சென்று சங்கிலிக் கறுப்பண்ணனுக்கு முன்னுல் தான் திருடிவந்த பொருள்களில் கால் பாகத்தைக் காணிக்கையாக வைத்துவிடுவது வழக்கம். (அந்த தேவதைக்கு இவ்வாறு கால் பங்கு கொடுப்பதாலேயே அவன் ஒரு நாளும் யாரிடமும் அகப்பட்டுக்கொள்ளாமல் தனது தொழிலை நடத்தி வருவதாக உறுதியாக நம்பி யிருந்தான். "இந்தத் தொழிலிலே அவனுக்கு ஒரு கூட்டாளி ஆண்டு. தெய்வத்திற்குக் கால் பங்கு கிடைக்கிறது போல் அவனுக்கும் க்ால் பங்கு உண்டு.”-இப்படி அந்த மனிதர் சொல்லி முடிக்குமுன், ஏன் அவ்னுக்கு கால் பங்கு? கூட்டாளி என்ருல் சரிபாதி கிடைக் வேண்டாமா?’ என்று குறுக்கிட்டார் இளங்கீரனர். - அந்தக் கூட்டாளி ராமசாமியோடு சேர்ந்து இருடப்போவதில்லை. எந்த வீட்டிலே, எந்த சமயத் லே கை வைக்கலாமாமென்பது பற்றிச் சரியான உளவறிந்து சொல்லுவதோடு அவன் வேலை முடிந்து விடும். குடும்பங்களின் பொருள் நிலை பற்றியும்,