பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தங்கச் சங்கிலி யடித்துவிட்டு வெற்றியுடன் வரும்போது இந்த எண் ணம் வலிம்ையட்ைந்து கடைசியில் அவன் நம்பிக் கையை முற்றிலும் இழந்துவிட்டான். அதன் விளைவாக அவன் காணிக்கை செலுத்து வதில் அசிரத்தை காட்டலானன். முன்பெல்லா கால்பங்கு கணக்காகச் செலுத்தியவன் இப்பொழுது இஷ்டம்போல் ஏதாவது வைப்பதென ஆரம்பித்து விட்டான். ஒரு கையால் காணிக்கை செலுத்தி மற் ருெரு கையால் எடுத்துக் கொள்வதற்கு எவ்வளவு செலுத்தினல் என்ன என்று அவன் கருதினன், அவன் காணிக்கை செலுத்துவதும் நொண்டி அதை எடுத்துக் கொள்வதும் அப்படித்தான்_அவனுக்குத் தோன்றியது. தெய்வ நம்பிக்கை இருந்தபோது அவன் கணக்கில் தவறியதில்லை. தெய்வத்திற்குக் கால்பங்கு பிரிப்பதுபோலவே கூட்டாளிக்கும் சிரி யாகப் பங்கு பிரித்து வந்தான். இப்பொழுது தெய் வத்தையே ஏமாற்றும்போது அந்த நொண்டியைப் பற்றி அவன் கவலைப்படுவான? அதல்ை நொண்; யின் வருவாய் வரவரக் குறையத் தொடங்கிற்று. அவன் உண்டாக்கிய சூழ்ச்சி அவனுக்கே பாதகமாக முடிந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று புலர் படவில்லை. முன்புபோல ஒழுங்காகத் தனது பங்கைப் பெற வழி காண முடியுமா என்று அவன் பலவாறு ஆலோசனை செய்தான். ஒரு வழியும் அவனுக்கு புலப்படவில்லை. நம்பிக்கையைப் போக்கடிக்கிறது னுக்கு அது தெய்வங்கொடுக்கும் தண்டனையேர் என்றுகூட அவன் சந்தேகிக்கலானன். அந்த சந்தே கத்தைக் கண்டு அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது. சே. அது பலவீனத்தின் அறிகுறி என்று அவன் தன்னைத்தானே திடப்படுத்திக்கொண்டு மேலும் ஆலோசனையில் ஆழ்ந்தான். பலநாள் ஆலோசஇ, யின் பின் அவன் ராமசாமியிடம் நயமாகப் திே நிலைமையைச் சமாளிப்பதென்ற முடிவுக்கு வந்தாஜ்