பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக்கை 69 ராமசாமி, கொள்ளைப் பொருளைப் பங்கு போடும்போது நானும் உனக்கு உதவி செய்யட் டுமா?’ என்று மெதுவாகக் கேட்டான். 'உன்னுடைய உதவி தேவையில்லை. இத்தனை நாட்களும் நான் தனியாகத்தானே பங்கு பிரிக்கி றேன்; இப்பொழுது நீ எதற்கு? என்று ராமசாமி கொஞ்சம் சூட்டோடு பதில் சொன்னன். "தெய்வத்திற்குப் பிரிக்கும் பங்கில் தவறு வராமல் இருக்க வேண்டுமென்றுதான் சொன்னேன்; வேருென்றுமில்லை என்று மழுப்பினன் நொண்டி. இருந்தாலும் அவன் கூறியதின் உட்கருத்து ராம சாமிக்குத் தெரியாமல் போகவில்லை. தெய்வத்தைப்பற்றி நீ கவலைப்படவேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்ருன் அவன். "அதில் ஏதாவது தவறு நேர்ந்தால் தெய்வம் பொறுக்காது என்பதற்காகத்தான் சொன்னேன்’ என்று நொண்டி மேலும் பேசினன். - தெய்வத்தைப்பற்றி உனக்கென்னடா தெரி யும் ? உனக்குத்தான் அதில் நம்பிக்கையில்லையே ? என்று ராமசாமி கேலி செய்தான். நொண்டியின் வாய் அடைத்துப் போய் விட்டது. ஆனால், அவன் உள்ளம் குமுறியது. தன்னை ஏமாற்றத் தொடங்கியிருக்கும் அந்தத் திருட்னுக்கு நல்ல_பாடம் கற்பிக்க வேண்டுமென்று:புதியதோர் ஆத்திரமுண்டாயிற்று. அடுத்த முறை திருடும்ப்ோது அவனைக் காட்டிக் கொடுத்துவிடுவதென நொண்டி முடிவு செய்துவிட்டான். - சங்கிலிக் கறுப்பண்ணனுக்குத் தினசரி பூசை செய்ய ஒரு பூசாரி இருந்தான். அவ்ன் மகா உலோபி. விடிவதற்குச் சற்று முன்னதாக்வே அவன் கோயி இக்குக் காலப் பூசை செய்ய வரும்போது முன்பெல்