பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக்கை 73 கூலமுமில்லை. அவனைப்போல் மறுபடியும் நொண் டிக்கு ஒரு கூட்டாளி கிடைப்பது அரிது. அவனிடம் சமாதானமாகப் பேசி எப்படியாவது ஓரளவு பங்கு பெறுவதிலேதான் அவனுக்கு லாபமிருக்கிறது. இந்த விஷயம் நொண்டிக்கு நன்ருகத் தெரியும். அப்படி யிருந்தும் அவன் ராமசாமியைக் காட்டிக் கொடுக் கவே நினைத்திருந்தான். அதுவும் ராமசாமி இனி மேல் தெய்வத்திற்குப் பங்கே கொடுப்பதில்லை என்று முடிவு ச்ெய்த அதே சமயத்தில் ஏற்பட்டிருக்கிறது. நொண்டியை அவ்வாறு நினைக்கும்படி செய்தது ராமசாமியைக் கைவிட்ட தெய்வந்தானே என்று அவன் தீவிரமாகச் சந்தேகப்படலானன். அவன் முன்பு போல இப்பொழுது தெய்வத்தைப் பழிப்ப தில்லை. அதனல்தான் நம்பிக்கை ஒரு பெரிய புதிர் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று மீசைதாடிக் காரர் கதையை முடித்தார். ரயிலும் வேகம் தணிந்து நிற்கத் தொடங்கிற்று . . . மதுரை வந்துவிட்டது. நான் போய் வரு கிறேன்” என்று அவர் தமது கைப் பையையும், துணி முட்டையையும் எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டு ரயிலை விட்டிறங்கி நடக்கலானர். அது வரையிலும் யோசனையில் ஆழ்ந்து மெளனமாக இருந்த நண்பர்கள் வெளியே எட்டிப் பார்த்தார்கள். அந்த மனிதர் நொண்டி நொண்டி நடந்து ஜனத் திரளில் மறைவது அவர்க்ள் க்ண்களில் பட்ட்து. கைப்பெட்டிகளெல்லாம் பத்திரமாக இருக் கிறதா என்று பார் ' என்று சட்டென்று இளங் கீரனர் கூறினர். "அந்த நொண்டி திருடுவானென்று நான் நம்ப வில்லை ” என்ருர் முருகப்ப்சாமி. "எதற்கும் ஒரு தடவை பார்த்துவிடுவோம் ” என்ருர் இளங்கீரனர்.