பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 தங்கச் சப்கின் SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS பிறகு தேம்பித் தேம்பி அழுதாள். என்: எதற்காக இப்படித் தடுத்தீர்கள்? சாகப் போனலும் என் பாவம் என்னைத் தடுக்கிறதே !' என்று விம்மி, கொண்டே அரற்றினுள். " ஏனம்மா, இப்படிச் சிறு வயசில் உயிரைப் போக்கிக்கொள்ள நினைக்கிருய்? இது கடவுளுக்கு அடுக்குமா?’ என்று நான் :ெஈதுவாகக் கேட்டேன். “எத்தனை நாளைக்கு இந்தத் துன்பத்தைச் சகிக்க முடியும்? கொண்டவன் நல்லவனுக இல்லாவிட்டால் பெண்ணுக்கு இந்த உலகத்திலே சுகம் ஏது?’ என்று அவள் ஏக்கத்தோடு கூறினுள். அவள் கழுத்திலே தா லி மின்னுவதைக் கவனித்தேன். கன்னத்தில் வழிந்த கண்ணிரைத் துடைக்க அவள் கையை மேலே தூக்கினுள். அந்தக் கை மணிக்கட்டு வரையில் தீய்ந்து கிடப்பது அப் பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. நான் திடுக் கிட்டு, 'ஏனம்மா, கையில் என்ன?’ என்று தடு மாற்றத்தோடு கேட்டேன். அவள் மறுபடியும் விம்மலானுள். அவளால் துக்கம் தாங்க முடியவில்லை. நான் சமாதானப்படுத்த முயன்றேன். கை வெந்து போயிருப்பதன் காரணத்தைச் சொல்லும்படி மேலும் வற்புறுத்தினேன். சாராயம் பெட்டியிலே இருக்கிறது, எடுத்து வா’ என்று வீட்டுக்காரர் சொன்னர். நான் எடுத்துக் கொண்டு போக மறுத்தேன். அதனல் அவருக்குக் கோபம் வந்துவிட்டது. தாமே சென்று சாரா யத்தை எடுத்துக் குடித்துவிட்டு அந்தக் குடி வெறியிலே இப்படிக் காரியம் செய்தார். இந்தக் கையா எடுத்து வரமாட்டேனென்றது !’ என்றி குழறிப்பேசிக்கொண்டு அடுப்பில் இருந்த கொள்ளிக் கட்டையை எடுத்து என் கையிலே வைத்தார்; என்று கூறிக்கொண்டே கோவென்று கதறினுள், !