பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பன் வீராசாமி 89 10-மணிக்கு சென்னை நகர ஹைலண்டு மைதானத் திற்கு அருகேயுள்ள குதிரை வீரனுடைய சிலையை உடைத்து விட்டு, அந்த குதிரையிலே தான் அமர்ந்து கொண்டு உண்ணுவிரதம் இருக்கப் போவதாகவும் அவன் சென்னை முதல் மந்திரிக்குக் கடிதம் எழுதினனும். メ அதன் பயனுக வீராசாமியை இன்று அதிகாலை யிலே கைது செய்திருக்கிருர்கள். "ஆமாம், அந்தக் குதிரை மேலே உட்கார்ந்து சத்தியர்க்கிரகம் செய்ய் எதற்காகத் திட்டமிட் டாய்?” என்று பாதுகாவலிலிருந்த வீராசாமியைக் கேட்டேன். . 'குதிரைதான் கலியுக முடிவிற்கு அறிகுறி. அதன் மேலே அமர்ந்துதான் அடுத்த அவதாரம் வரப்போகிறது. நான் கைதியாகிவிட்டதால் இனிப் பிரளயத்தைத் தடுக்க வழியேயில்லை’ என்று அவன் கூறினன். அவன் பார்வையிலே ஏதோ ஒரு வெறியிருந் தது. அவனை மீட்டுக் கொண்டு போக வழியொன்றும் இருக்கவில்லை. போலீஸார் கேட்டபடி உத்திரவாதம் கொடுக்க அவன் மறுத்துவிட்டான். அவனுக்காக ஜாமீன் கொடுக்க யாருக்கும் தைரியம் வரவில்லை. கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியிலே சோதனை செய்ய முதலில் அனுப்புகிருேம். பிறகு பார்க்கலாம்” என்று கூறிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கு விடை கொடுத்தார். "இந்த தேசம் என்றைக்குமே உருப்படாது இன்று எனக்கு ஆதியிஜிருந்து, தெரியும், அது இன்றைக்கு நிச்சயமாகிவிட்டது” என்று வீராசாமி உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தது, வெளியே சிறப்பட எழுந்த என் காதில் விழுந்தது.