பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினிமாக் காட்சி சுந்தரத்தை இப்பொழுதெல்லாம் பார்ப்ப தற்கே பரிதாபமாய் இருக்கிறது. பாழடைந்து கவனிப்பாரற்று இடிந்து விழுந்துகொண்டிருக்கும் கோபுரத்தைப்போல அவன் காட்சியளித்தான். ஒரு காலத்திலே நாகரிகமாய் உடுத்திக்கொள்வதில் அவன் பெயர் வாங்கியிருந்தான். உடையணிவதில் அவனுக்குள்ள தேர்ந்த சுவையைக் கண்டு அவ னுடைய நண்பர்களெல்லாம் ஆச்சரியப் படுவார்கள். ஆனால், இன்று அவன் உடையைப்பற்றிச் சிந்திப்ப தாகவே தெரியவில்லை. அவனுடைய அழகிய கிராப்பு சீர்குலைந்து கிடக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னலே அவனுடைய காதல் மனைவி திடீரென்று நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தபோது இருண்டு போன அவன் முகம் இன்னும் ஒளி காணவேயில்லை. மேலும் மேலும் அதில் இருளின் ரேகைகள் வந்து குவிவது போலவே எனக்குத் தோன்றுகிறது. அவன், சிரித்துப் பேசி எங்களையெல்லாம் இன்பக் கடலில் ஆழ்த்தியதெல்லாம் கனவுபோல மங்கி மறைந்து விட்டது. இப்பொழுது அவன் கல கலவென்று. பேசுவதே கிடையாது. எங்களோடு அதிகமாகக் கலந்துகொள்ளுவதுமில்லை. நாங்களாக வலியச் சென்று இழுத்தால் எங்களுடன் வருவான். ஆனல் அவனுடைய சிந்தனையெல்லாம் எங்கேயோ இந்த் கும். முன்பெல்லாம் நாங்கள் எந்த விஷயத்தை! பற்றிப்பேசினலும் அதில் அவன் பிரதான பங்கெடு துக்கொண்டு ஹாஸ்யமாகவும் குத்தலாகவு! சாதுர்யமாகவும் பேசுவான்; மற்றவர்களைத்