பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2' தங்கச் சங்கிலி அப்படி வருவது எனக்கு மலைப்பை உண்டாக்கிய முதலில் அவன் என்னைக் கவனிக்கவில்லை. பிற கூட்டம் சிறிது குறையவே என்னைக் கண்டதும் அப்பொழுதுதான் அங்கு வந்தவன்போல அவசரம் அவசரமாக அருகே வந்தான். வந்துவிட்டாயா? இதோ டிக்கெட் வாங்கி வருகிறேன்” என்று கூறி விட்டு வேகமாக ஓடினன். காட்சி தொடங்கும் வரையில் அவன் என்னிடம் வார்த்தையாடவில்லை. எனக்கு அது சங்கடமாக இருந்தது. இருந்தாலும் நான் அவனுடைய மெளனத்தைக் கலைக்க விரும்பாமல் கொட்டகைக் குள் மெதுவாக நுழையும் மக்களைக் கவனித்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். அந்தப் படம் நாங்கள் பார்த்ததுதான். கடைசிக் காட்சி. கூட்டம் அதிகம் இருக்கவில்லை; காரணம் அந்தப் படம் அவ்வளவு சுவாரசியமாக, இல்லை. எப்படியோ இழுத்துப் பிடித்துக்கொண்டு. விளம்பர பலத்தினால் ஒரு வாரம் ஒடியிருந்தது. இடைவேளைக்கு முன்னதாகவே எனக்கு அலுழ். புத் தட்டிவிட்டது. இருந்தாலும் சுந்தரத்தைத் திருப்திப்படுத்துவதற்காக மற்றப் பகுதியையும். சகித்துக்கொண்டிருந்தேன். சுந்தரம் படத்தைப் பெரிதும் ரசிக்கிருனென்று நான் நினைத்துத்: திரும்பிப் பார்த்தேன். அவன் படத்தைப் பார்ப்பதாகவே தோன்றவில்லை. கண்களை மூடிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு அசைவற். றிருந்தான், தலைகீழேகுனிந்தபடியிருந்தது. எனக்கும். அவனுக்கும் ஒரே வயதுதான். இருவரும் ஒரே தெருவில் வசிப்பவர்கள். பால்யம் முதல் நாங்கள் தோழர்கள். ஆனால், இப்போது பார்ப்பதற்கு என்னைவிட அவன் இரட்டிப்பு வயதானவன்போல் ேதான்றின்ை.