பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினிமாக் காட்சி 93 கண்ணை மூடிக்கொண்டு அவன் உட்கார்ந் திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. எதற்காக அவன் என்னை இவ்வாறு சினிமாப் பார்க்க அழைத் தான் என்பதும் அந்தக் காட்சி முடியும்வரை ஒரு புதிராகவே இருந்தது. சினிமா வேதனை ஒருவாறு முடிவடைந்ததும் நாங்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டோம். இரவு அதிகநேரம் ஆகிவிட்டபடியால் பஸ், டிராம் ஒன்றும் கிடையாது. நாங்கள் வசித்த தெரு சமீபத்தில்தான் இருந்ததாகையால் நடந்தே போகலாமெனக் கூறி னேன்; அவன் யாதொரு பதிலும் கூருமல் வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்தான். கொஞ்சநேரம் வரையில் இவ்வாறு சுந்தரம் பேசாமல் நடந்தான். நானும் அவனைத் தொந்தரவு செய்யக் கூடாதென்று வார்த்தை கொடுக்காமல் பின்தொடர்ந்தேன். பகல் நேர்த்திலே இரைச் சலும், பரபரப்பும் மிகுந்துள்ள அந்தச் சென்னை நகர வீதியிலே இப்பொழுது எவ்வித நடமாட்டத்தையும் காண முடியவில்லை. உயிரற்றது போன்ற அந்த வீதியின் நிசப்தம் என் உள்ளத்திலே ஒருவித விநோத மான உணர்ச்சியை உண்டுபண்ணிற்று.

படக்காட்சி பிடித்ததா?’ என்று சுந்தரம் திடீ ரென்று கேட்டான்.

"உனக்குப் பிடித்திருந்தால் அதுவே எனக்குத் திருப்தி - உனக்கர்க்த்திர்னே நான் வந்தேன்? என்றேன் நான். "படம் சுத்த ஆபாசந்தான். ஆனல் அதிலே ஏதாவது ஒரு அம்சங்கூட உன் மனதைக் கவர வில்லையா?” என்று கேட்டுவிட்டு அவன் என்னைக் கூர்ந்து நோக்கினன். அவன் கண்களுக்குள்ளே நூறு