பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினிமாக் காட்சி 95 டிருக்க எனக்கு மட்டும் உரிமை உண்டு என்று நினைத்து, அந்த நினைப்பிலே பூரித்துப் போயிருந் தேன். நீ மட்டும் எதிர்பார்த்ததற்கு மாருக அந்த இசையை நினைவில் வைத்திருக்கிருய். அதை அறிந் ததும் எனக்கு என்றுமில்லாத பொருமை ஏற்பட்டு ட்டது. மன்னிக்க வேண்டும்’ என்று அவன் கம்மிய குரலில் கூறினன். என்னுல் பதில் ஒன்றும் பேச முடியவில்லை. ஏதாவது கூறவேண்டுமென்று வார்த்தைக்காகத் திண்டாடினேன். அவனுடைய உள்ளத்திலே அழுந் திக் கிடந்த அந்தச் சோகத்தை எப்படியாவது தணிக்க வேண்டுமென்ற ஆவல் மேலெழுந்தது. } "உன் மனைவி எழுதிய பாட்டுக்களை அவளே பாடுவதைக் கேட்கும்படி எங்களே அந்தக் காலத்தில் உற்சாகமாக அழைத்துச் செல்வாயே?’ என்று ஏதோ கேட்டுவைத்தேன். "ஆமாம், அதெல்லாம் அந்தக் காலம். இப் பொழுது அவளுடைய பாட்டெல்லாம் எனக்கே தான் சொந்தம். அதிலே யாரும் பிரவேசிக்கக் கூடாது' என்று அவன் பேசிக்கொண்டே போனன். என் வீட்டு வாசலை நெருங்கினுேம். 'போய் வரட்டுமா, சுந்தரம்” என்றேன் நான். அது அவன் காதில் விழவில்லை. அவன் திரும்பிப் பாராமல் நடந்துகொண்டிருந்தான். அவ ன் வாயிலிருந்து வெளி வந்துகொண்டிருந்த வார்த்தைகள் என் காதை அடைவதற்குள், அவன் வாழ்வைப்போலவே உருக்குலைந்து பொருளிழந்து வெற்ருெலியாய் மாறிக்கொண்டிருந்தன. -