பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காளிங்கராயன் கொட்ை பார்த்துக்கொண்டிருக்க நேரும் என்று கான் கினைத்த தில்லை. இந்த கிலேயிலே எனக்கு எங்கள் ஊரில் இருக்க எப்படிப் பிடிக்கும்?" 'அதற்காக ஜெயிலுக்கு வரவேணுமா?” 'இன்னொரு முக்கியமான விஷயம் ஊருக்குப் போன பிறகுதான் எனக்கு தெரிந்தது. பதினேந்து வருஷங்களாகப் பிறர் ஏவலின்படி யந்திரம்போல வேலை செய்த எனக்கு அங்கே சொந்தமாக எந்தக் காரியமும் செய்ய முடியவில்லே. பண்ணைக் காரியங்களைக் கவனிக்கும்படி துரண்டுகின்ற மேலதிகாரியும் இல்லை; உள்ளுக்குள்ளே தூண்டுதலும் இல்லை. யாருக்காகவாவது வாழ்ந்தாலாவது அந்தத் துரண்டு தல் வரும். அதுவும் இல்லாது போயிற்று. அதனல் பிறர் ஏவலின்படி வேலைசெய்து காலத்தை கிம்மதியாகக் கழிப் பதற்கு எனக்கு ஜெயில்தான் சரியான இடம் என்று வந்துவிட்டேன்.” "சரி, சரி. புரிஞ்சுது அந்தக் குட்டி பக்கத்து வீட்டிலே இருக்கும்போது உனக்கு அங்கே வாழப் பிடிக்கவில்லே. ஆனல் ஒரு விஷயங்தான் எனக்கு விளங்கமாட்டேனென் கிறது. உன் சொத்தை அந்தப் பயலுக்கு எதுக்கு எழுதி வைக்கவேணும்?” 'விதியின் விளையாட்டைப் பூர்த்தி செய்ய வேணு மென்பது எண்னுடைய ஆசை. முதல் தடவை கொலேக் குற்றத்தை என்மேல் சுமத்தியும் என் சிற்றப்பனுக்கு என் சொத்துக் கிடைக்கவில்லை. அதை அவருக்குச் சேரும்படி இப்போ நானே செய்துவிட்டேன். - "என்ன? அப்போ முதல் தடவை நீ கொலை செய்ய வில்லையா?” என்று மாரியப்பன் திடுக்கிட்டுக் கேட்டான். கான் அந்தமாதிர் ஒரு குற்றத்தைக் கனவில்கூட கினைக்கமாட்டேன். யாரோ செய்த கொலேயை என்மேல்