பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தங்கச் சங்கிலி களே வெட்டும் இடத்திற்கு அருகிலேயே வந்து விட்டான். அப்பொழுதுதான் முதல் முதலாத் அவர்கள் சந்தித்தார்கள். அவனுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. நல்லு கட்டுறுதியுள்ள உடல். மானிறமாக இருந்தாலும் பார்ப்பதற்கு வசீகரமான தோற்றமுடையவன். அவளுக்குக் கல்யாணமாகிவிட்டது. ஆனல், புருஷன் பட்டாளத்தில் சேர்ந்து வட ஆப்பிரிக்கா விலே எகிப்துப் பாலைவனப் பிரதேசத்தில் எங்கேயோ சண்டையில் ஈடுபட்டிருக்கிருன். இரண்டாவது உலக யுத்தத்திலே ஜெர்மானியரை எதிர்த்துப் போரிட்ட வீரர்களில அவனும் ஒருவன். அந்தப் பெண் தன் கிழத் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள். அவள் கூலி வேலை செய்துதான் கிழவிக்குச் சோறு போட வேண்டும்; தானும் வயிறு வளர்க்க வேண்டும். கணவனேடு வாழ்ந்த ஒரு வருஷ காலத் திலே அவள் சுகம் என்பதைக் கண்டதே யில்லை, அவனே குடிகாரன். குடி மயக்கத்தில் வீட்டுக்கு வருவான். அவளையும் அவள் தாயையும் சேர்த்து. வாயில் வந்தபடி பேசுவான். பதில் பேசினல் அடி தான் கிடைக்கும். - . - அவன் முட்டக் குடிகாரன் என்று தெரிந்தே, கிழவி அவனுக்குத் தன் ஒரே பெண்ணைக் கொடுத் தாள்.) வேறு நல்ல வரனே அந்த ஏழைக் கிழவியால் தேட முடியவில்லை. பெண்ணென்று பிறந்துவிட்டால், யாருக்காவது கல்யாணம் செய்து கொடுத்தாக வேண்டுமே. அதனல் வீரப்பன் என்ற அந்தக் குடிகாரனுக்குப் பெண்ணைக் கொடுக்கச் சம்மதித்து, Լ-I-IT 6iT வீரப்பன் பட்டாளத்தில் சேர்ந்து கொண்; தால் அந்தப் பெண் ராமக்காளுக்கும் அவள் தாய்க்