பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை 25 சமத்தினர்கள். என் தாய் தந்தையர் முன்னமேயே இறந்து போய் விட்டார்கள். நான் ஒண்டியாக இருந்தேன். சிற்றப் பனுக்கு என் சொத்தை அபகரிக்கவும், அத்தை மகளேத் தன் மகனுக்குக் கலியாணம் செய்யவும் இது நல்ல உபாய மாகப்பட்டது. பணத்தை வாரி இறைத்துச் சாட்சிகளே யெல்லாம் கன்ருகத் தயார்செய்து நீதிமன்றத்தை அவர் ஏமாற்றிவிட்டார்.” 'இதுதானப்பா உலகம். இப்போ தெரிஞ்சுதா?” “இது உலகமில்லை, மாரியப்பா. உலகம் இப்படி .யிருந்தால் முன்னமே அழிந்துபோயிருக்கும்.” “அட போப்பா. நீ பிழைக்கத் தெரியாத மனுஷன். அது இருக்கட்டும், ஜெயிலுக்கு மறுபடியும் வரத்தான் தீர் மானம் செய்தாயே, உன் சிற்றப்பனேயாவது மிரட்டி அடித்துவிட்டு வரப்படாதா?” "மாரியப்பா, யாருக்கும் துன்பமுண்டாக்க வேண் -டும் என்று எனக்கு இப்போ ஆசையில்லை. என் சிற்றப் பன்மேல்கூட எனக்கு இப்போ கோபம் கிடையாது. ராம சாமிக்குக் கலியாணம் ஆகி என் அத்தை மகள் வீட்டிற்கு வந்ததும் என் சிற்றப்பனேடு ஒரே குடும்பமாக இருக்க மறுத்துவிட்டாளாம். அவர் தனியாக வாழ்ந்து சிரமப் பட்டாராம். அவருக்கு வீட்டிலேயே தண்டனை கிடைத்து விட்டது. அதைக்கூட நான் விரும்பவில்லை. என் அத்தை மகள் எனக்காகப் பரிவு காட்டித்தானே அப்படி அவரை -ஒதுக்கி வைத்திருக்கிருள்? நான் அவள் குழந்தையையே கொல்ல முயன்றதாக அவளை நம்பும்படி செய்துவிட்டால் பிறகு என்னே அவள் வெறுக்கத் தொடங்குவாள். அவள் -குடும்பம் ஒற்றுமையாக வாழும். அதைத்தான் கான் விரும்பினேன்.” இதைக் கேட்கக் கேட்க மாரியப்பன் கண்களிலிருந்து கண்ணிர் தாரை தாரையாக வழியத் தொடங்கியது. கசப்