பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தங்கச் சங்கிலி TamilBOT (பேச்சு) செய்வதற்கு அவன் என்றுமே பயப்படமாட்டான். எத்தனை வேலையென்ருலும் அவன் முகம் கேரளும் செய்வான். ஆனல் அப்படி வேலே செய்த பின்னும் கடுகளவாவது அன்பான பேச்சில்லையே என்றுதான் அவன் மனம் குலைந்தான். தாயிடத்து அவன் அன்பை அறியக் கொடுத்து வைக்கவில்லை;_தந்தை யிடத்து அன்பைப் பெறவும் அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை. அைைதயாக வளர்கின்ற வீட்டிலும் அன்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. சிறுவனக இருந்த் பொழுது வேறு வழி தெரியாமல் அவன் எப்படியோ காலத்தைக் கடத்தி வந்தான். ஆனல் கொஞ்சம் வயது வந்ததும் அவளுல் அந்த நிலையைச் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. சொந்தக் குழந்தைகள் சோம்பேறிகளாகவும் துஷ்டத்தனமுடையவர்க ளாகவும் இருந்தாலும் அவர்களிடம் அன்பு காட்டு கிற அந்த உறவினர்கள் வேலைகளையெல்லாம் சரி வரச் செய்துவரும் தன்னிடம் அன்பு காட்டவே யில்லை என்ற காரண்த்தால் அவன் தான் பிறந்த் ஊரைவிட்டு யாருக்கும் சொல்லாமல் ஓடிப் போய் விட்டான். செல்லப்பன் சுமார் ஏழெட்டு வரு ஷங்கள் பல கிராமங்களிலும் நகரங்களிலும் சுற்றி அலைந்துவிட்டுக் கடைசியில் தற்செயலாகக் காட்டுப் பாளையம் வந்து சேர்ந்தான். அங்கு வந்தபோது அவனுக்கு ஒரு புதிய எண் ணம் உண்டாயிற்று. அதுவரையில் அவன் பலரிடம் பலவிதமான ஊழியம் செய்து அலுத்துப்போயிருந் தான். இனிமேல் சுதந்திரமாக யாருக்கும் அடிமை செய்யாமல் வாழ முயலவேண்டும் என்று அவனுக்கு ஆவலுண்டாயிற்று. ஊரெல்லாம் சுற்றியலைந்து வேலை செய்ததில் கிடைத்த வருவாயில் மீதியர்; அப்பொழுது அவன் கையில் நூற்று இருபது ரூபாய் இருந்தது. அதைக் கொண்டு இளங்கறவையாக ஒரு எருமை வாங்கிக்கொண்டான், மாதம் இரண்டு