பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது காதல்? 109 ளுக்கு ஒரே வேதனை. ஒரு வேளை தாயார் மாய்ந்து போனல் தன்னுடைய நிலைமை என்னுகுமோ என்று. அவள் துடித்தாள். செல்லப்பன் இரவு பகல் கிழவி யின் பக்கத்திலிருந்து அவளுக்குப் பணிவிடை செய்தான். நகரத்திலிருந்து ஒரு வைத்தியரை அழைத்துவந்து சிகிச்சை செய்ய வகை செய்தான். அவனுக்கும் ஒரே கவலை. ராமக்காள் வருத்தப்படு வதை அவனுல் சகிக்க முடியவில்லை. அதோடு அவன் கிழவியைத் தன் தாயைப் போலவே மதித்திருந் தான். அவளும் அவனிடத்திலே அத்தனை அன்பு காட்டினள். செல்லப்பன் எடுத்துக்கொண்ட சிரத் தையால் கிழவி நோய் நீங்கி எழுந்தாள். செல்லப்பனும் ராமக்காளும் அநேகமாக ஒத்த வயதினர். செல்லப்பன் சற்று மூத்திருப்பான். இருந் தாலும அவனை பெயர் சொல்லியே அவள் அழைத் தாள். அதுதான் அவனுக்கு விருப்பமாக இருந்தது. இவ்வாறு அவர்கள் பழகி வருவதைக் கண்ட ஊர் சும்மா இருக்குமா? முதலில் பேச்சுக் கொஞ்சம் லேசாக எழுந்தது. கிழவி படுத்திருந்தப்ோது செல்லப்பன் பல தடவை இரவு வேளைகளிலே அவர்கள் குடிசையிலே தங்கியதைக் கவனித்த பிறகு வதந்திகள் பலமாகப் பரவலாயிற்று. இருந்தாலும் யாரும் செல்லப்பன் முன்னிலையிலோ மற்ற இருவர் முன்னிலையிலோ ஜாடையாகக்கூட ஏ த7 வ து சொல்லப் பயந்தனர். செல்லப்பனின் தேக வலிமை மட்டும் அதற்குக் காரணமல்ல. அவர்கள் மூவரிடத் திலும் ஏதோ ஒரு விதமான களங்கமற்ற தன்மையின் பொலிவிருந்தது. வெளிப்படையான பேச்சும், குற்றமற்ற பார்வையும் எல்லோரையும் அவர் களிடம் மரியாதையாக நடந்து கொள்ளச் செய்தன. ஆனல் எதிரிலே பேச அஞ்சியவர்கள் மறைவிலே ஏதாவது கதை கட்டாமலிருக்கவில்லை. ஒன்றையும்