பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 12 தங்கச் சங்கிலி களுக்கு ஊரார்மேல் ஆத்திரம் பொங்கிற்று. பிறகு "எவனே என்னவோ பேசினல் அதைப்பற்றி நமக் கெதற்குக் கவலை? என்ற மனப்பான்மை பிறந்த்து: அத்ஞ்ல் அவர்கள் வதந்தியை லட்சியம் செய்ய, வில்லை. ஆனல் வீரப்பன் இவ்வாறு தடை! விதித்ததைத்தான் அவர்களால் சகிக்க முடிய வில்லை. . -. செல்லப்பன் உள்ளம் குமுறியது. வாழ்க்கை யிலே என்றும் காணுத ஒரு பெருஞ் செல்வத்தைப் பெற்றுத் திடீரென்று இழந்ததுபோல அவன் பரி தவித்தான். அவனுக்கு வாழ்க்கை மறுபடியும் பாலே வனமாகிவிட்டது. ராமக்காளைச் சந்திக்காமல் தன்னல் உயிர் வாழ முடியாது என்று அவன் அறிந்: தான். ஆனல் வீரப்பன் இருக்கும் அந்த வீட்டிற்குள் அடியெடுத்துவைக்க அவன் விரும்பவில்லை. - ராமக்காளின் மன நிலையும் இதே போலத்தான். இருந்தது. பத்து நாட்களாக அவள் செல்லப்பனைப் பார்க்கவில்லை. அவனுடைய அன்பு நிறைந்த, முகத்தை அவள் கண்டு களிக்கவில்லை. அவளால், அவனைப் பார்க்காமல் உயிர் தரிக்க முடியாது என்று. தோன்றியது. மறுநாள் இரவு யாரும் அறியாமல் செல்லப்பனுடைய குடிசைக்கு அவள் வந்து விட்டாள். என்றும்போல அவர்கள் உள்ளம் மகிழ்ச்சியில் மிதந்திருக்க உலகம் மறுபடியும் இன்ப வீடாகி, விட்டது. இரவில் வெகுநேரம் வரையில் குழந்தை களைப்போல என்னென்னவோ பேசிக் களித்தனர். _இவ்வாறு அவர்கள் பலமுறை ரகசியமாகத் சந்தித்தார்கள். எத்தனை நாட்களுக்கு அது மற்றவர். களுக்குத் தெரியாமலிருக்க முடியும்? ஊருக்கு தெரிந்து வீரப்பனுக்கும் வெளியாகிவிட்டன.