பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தங்கச் சங்கிலி ம்று வினுடியில்தான் அவனுக்கு ஐயோ தவறு; செய்து விட்டேன்’ என்ற உணர்ச்சி உண்டாயிற்று. ராமக்காள் அப்படியே மூர்ச்சையுற்றுக் கீழ்ே சாய்ந்தாள். மண்டையிலிருந்து ரத்தம் பீறிட்டு: பெருகியது. ទ្វ அவள் ஒருவிதமான சத்தமும் செய்யாததால் குடிசைத் திண்ணையிலே படுத்து உறங்கிக்கொண் டிருந்த கிழவிக்குக்கூட நடந்ததொன்றும் தெரியாது. வெகு நேரத்திற்குப் பிறகு ராமக்காள் கண்ணைத் திறந்தாள். கலவரத்தோடு தன்னைப் பார்த்துக் கொண்டு நின்ற வீரப்பனை ஒரு நிமிஷம் ஏறிட்டுப் பார்த்தாள். அவள் கண்களிலே அப்பொழுது கருணை ததும்பியது. நீங்கள் என்மேல் வீணாகச் சந்தேகங். கொண்டீர்கள். நான் குற்றமற்றவள். உங்களுடைய சந்தேகமும், அன்பில்லாத நடத்தையும் இன்று என்னை ஒரு காரியம் செய்யும்படி தூண்டின. செல் லப்பன் என்னுடைய உடம்பை என்றுமே விரும்பிய தில்லை. அவன் என்னைத் தொட்டதுகூடக் கிட்ை யாது. இருந்தாலும் ஊரார் பேச்சும் உங்கள் சந்தேகமும் எனக்குக் கலக்கத்தைக் கொடுத்தனர் ஒருவேளை அவன் என் உடம்பை விரும்புகிருனே என்று சந்தேகப்படலானேன். என் உடம்போ நீண்ட நாளைக்கு நிற்க முடியாது. அதனால் அது இருக்கும்போதே அவன் விருப்பமும் நிறைவேறட்டும் என்று நான் தீர்மானித்தேன். அதன்படி அவ்னிடம் இன்று போனேன். அவன் என்னைத் தீண்டியிருந்தால் நான் மறுமுறை அவனைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன். ஒருநாளோடு அவன் உறவு சரியென்று வந்துவிட நான் தீர்மானித்திருந்தேன். ஆனல், அவன் என்னைத் தொட மறுத்துவிட்டான். என்னைத் கோபித்துக்கொண்டான். எனக்குப் பயித்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்டான். நான் உள்ளம்