பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - தங்கச் சங்கிலி கேட்டுக் கொண்டதுதான் அவள் அவர்களுடன் பேசிய கடைசிப் பேச்சு. அதன்பின் தன் வா! நாளில் மறுபடியும் ஒரே தடவைதான் அவள் தன் தாயிடம் வாய் திறந்திருக்கிருள். . அந்த மெளனத்தைப் போக்கிவாழ்க்கையில் உற். சாகங் கொள்ளச் செய்ய வேண்டுமென்று ராமப்பன் முயற்சி செய்யாமலில்லை. அவனும் பல வகைகளில் யத்தனம் செய்தான். ஐந்து வருடங்கள் இவ்வாறு வாழ்க்கை நடந்துவந்தது. ராமப்பன் தனது முயற் சியில் வெற்றி பெருமலேயே உலகத்தைவிட்டுப் பிரிய வேண்டியதாயிற்று. திடீரென ஊரில் தோன்றிய வாந்திபேதிக்கு அவன் பலியானன். புருஷன் இறந்த பிறகு அவனுடைய பூஸ்தி. திக்கு வேலாத்தாளே எல்லா உரிமைகளையும் அடைந் தாள். வருஷ்ம் முப்பதாயிரம் ரூபாய் வரும்படி: உண்டு; அதை அவள் தன்னிஷ்டம்போல் என்னு: வேண்டுமானலும் செய்யலாம். அவளைக் கட்டுப் படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. - இப்பொழுது எல்லோரும் வேலாத்தாளுக்கு. ரொம்ப மரியாதை காட்ட ஆரம்பித்தார்கள். பணக் காரி அல்லவா? அவளுக்கில்லை யென்ருலும் அவள் பணத்திற்கு மரியாதை காட்டித் தீர்வேண்டுமே! பந்துக்களும், மற்றவர்களும் அவளுடைய பிரிய்த் தைச் சம்பாதிப்பதற்காகப் போட்டி போட்டார் கள். அதற்காக என்ன காரியம் செய்யவும் அவர்கள் தயாரானர்கள். ஒருவர் மேல் ஒருவர் பொய்யும் புனேசுருட்டும் சொல்லி வேலாத்தாளுக்கு மற்றவா களிடம் வெறுப்புண்டாக்கவும் சூழ்ச்சி செய்தாள்கள். ஆனல் வேலாத்தாள் யாருடனவது வாய்திறந்து பேசுகிருளா? அவளுடைய பிரியத்தையாரிடமாவது காட்டுகிருள் இல்வே இல்லை. விட்டிலே சமையல் 沙