பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தங்கச் சங்கிலி பிற்று. அதாவது கந்தப்பன் எங்கேயோ ஒரு சந்யாசி மடத்தில் இருந்துகொண்டு அன்னக் காவடி எடுத்துக் காலம் தள்ளுவதாகவும், யாரோ ஒன் றிரண்டு பேர் நேரிலேயே அவனைப் பார்த்ததாகவும் பேச்சு வந்தது. ஒருநாள் வேலைக்காரியின் மூலமாக இது வேலாத்தாள் காதுக்கும் எட்டிற்று. ஊரிலே பரவுகின்ற செய்திகளை இப்படி அவள் அடிக்கடி சொல்லுவதுண்டு. வேலாத்தாள் அவற்றை மெளன மாகவே கேட்டுக்கொண்டிருப்பாள். ஊர்ச் செய்தி களைக் கேட்பதில் பிரியம் உண்டு, இல்லை என்று அவள் காட்டிக்கொண்டதில்லை. அதேபோல இந்த வதந்தி யையும் கேட்டுக்கொண்டாள். பிறகு ஒரு வருஷத்திற்குபின் ஒரு நாள் வேலாத் தாளின் மெளனம் கலந்தது. கந்தப்பனைப்பற்றி அவள் தன் தாயிடம் பேச வாயெடுத்தாள். இதற்கு, ஒருவருஷம் எண்ணி எண்ணி முடிவு செய்திருப்பாள் போலிருக்கிறது. கடைசியாக எப்படியோ பேசுவ தென்று துணிந்துவிட்டாள். "இந்தப் பூமிகளை யெல்லாம் மேற்பார்வை செய்ய நம்பிக்கையான ஒருவர் இல்லாமல் எத்தனையோ நஷ்டமாகிறது” என்ருள் அவள் பொதுவாக. இப்படிப் பேச்சு வரவேண்டுமே என்று ஏங்கிக் கிடந்த கிழத்தாயார் ஆவலோடு, "நானும் இதை உன்னுடன் சொல்ல வேண்டுமென்றுதான் தின்மும் நினைக்கிறேன். உன் தம்பி இருக்கிருனே, அவனையே பார்க்கச் சொன்னல் போகிறது. அவனைவிட நம்பித் கையாக யார் நமக்குக் கிடைக்கப் போகிரு.ர்கள்? என்ருள். - - 'தம்பி கூடாது. அவன்தானே உங்கள் பன்: யைக் கவனிக்கவேண்டும்? அதுவும் சிறியதல்லவே?