பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தங்கச் சங்கிலி அவன் ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார் வையிலே அவனுடைய உணர்வு இருக்கவில்லை. நாங்கள் அவன் கண்ணில் பட்டிருக்கலாம் ; ஆனால், அவன் உள்ளத்தில் படவில்லை. ஆனால், எங்களையே அவன் பார்த்திருந்தான். பிறகு திடுக்கிட்டான். அப்பொழுதுதான் நாங்கள் அங்கு நிற்பது அவ னுக்குப் புலனாகியிருக்கிறது. எதிர்பாராதவிதமாக எங்களை அங்கே கண்டதால் அவனுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. அப்பொழுதும் நாங்கள் திகைத்து வாயற்று நின்றிருந்தோம். சற்று நேரத்தில் அவனுக்கு எங்கள் வருகையின் காரணம் விளங்கிவிட்டது. அமைதியாக அவன் சாமியாரைப் பார்த்துப் பேசினன். சுவாமி, இந்தக் குழந்தையை நீங்கள்தாம் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றினல் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும். இறைவன் மனமகிழ்ந்து உங்களுக்கு நீங்கள் நாடும் நற்கதியைக் கொடுப்பார். நான் சற்று முன்னதாகவே என் மனைவியோடு சென்றிருக்க வேண்டும். ஆனால், உணவில்லாது வாடி உலர்ந்து போன அவளுடைய உயிரற்ற கோலமும், பசியால் அவளைப் பார்த்து உருகும் குழந்தையின் முகபாவ மும் என்னைக் கவர்ந்துவிட்டன. காணக் கிடைக்காத இந்தக் காட்சியை எழுதி முடித்துவிட்டுப் போகவே தாமதித்தேன். அதுவும் நல்லதாயிற்று. குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” இவ்வாறு கூறிவிட்டு அவன் பக்கத்திலே இருந்த கிண்ணத்தை எடுத்து அதிலிருந்த திரவத்தை ஆவலோடு பருகினன். நாங்கள் தடுக்கவில்லை. அந்த எண்ணம் எங்க ளுக்குத் தோன்றுமுன் அவன் பருகிவிட்டான். பட்டினியால் உலர்ந்து போன அவன் முகம் ஒரு நிமிஷம் அற்புத ஒளியோடு பிரகாசித்தது. - அவன் எழுதிய உணர்ச்சி பொங்கும் ஒவியங்கள் வீடு முழுவதும் உயிர்பெற்று நின்றன.