பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ತಿಸಿ காளிங்கராயன் கொடை 'கனகா, மாலையைச் சுந்தரவல்லிக்குக் கொடுக்க வில்லையா?” என்று அவசரமாக மாணிக்கம் கேட்டார். கனகராஜன் அவர் முகத்தைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அப்பா, இந்த மாலே உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?’ என்று கம்மிய குரலில் கேட்டான். அந்தக் கேள்வி மாணிக்கத்தைத் திடுக்கிடச் செய்தது. 'ஏன், இதைப்பற்றி இப்பொழுதென்ன?” என்ருர் அவர். "மாலேயை உங்களிடமே கொடுத்துவிடும்படி சுந்தர வல்லியின் தாய் கூறிவிட்டார்கள். இந்த மாலையைப் பார்த்ததும் அவர்கள் அப்படியே கலங்கிப் போய்விட்டார் கள்” என்று கனகராஜன் கூறினன். அவன் கண்களில் கண்ணிர் உருண்டது. மாணிக்கம் சற்றுநேரம் அப்படியே ஸ்தம்பித்து கின்ருர். பிறகு ஒருவாறு சமாளித்துக்கொண்டு, “காமாட்சி யின் ஊர் எதுவென்று சொன்னய்?” என்று கேட்டார். 'நாமக்கல்.” "அது அவளுடைய கணவன் ஊரா? அல்லது அவளு டைய பிறந்த ஊரா?” "கணவனுடைய ஊர்தான் அது. அதுதானே அவர் களுக்கும் ஊர்? ... 'நான் அதைக் கேட்கவில்லை. அவள் - பிறந்து வளர்ந்த ஊர்-அதாவது அவளுடைய பெற்ருேருடைய ஊரைத்தான் கேட்கிறேன்.” "அதுவா? அது காட்டுப்பாளையமாம். கோயம்புத்து ஜில்லாவிலே ஈரோட்டிற்கு எட்டு மைல் தூரத்திலே இருக்கிறதாம்.” -