பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி வாக்கு < * , * 哆 * * 参 * o 景 'என்ன முட்டாள்தனம்! எல்லாம் குருட்டு கம் பிக்கை, குருட்டு நம்பிக்கை” என்று கசந்து பேசினன் சுந்தரேசன். "பத்து நாளிலேயே உனக்கு இப்படி வெறுப்பு ஏற் பட்டால் இங்கேயே விடுமுறை முழுவதும் கழிக்க வேண் டிய என் கிலேமை எப்படி இருக்கும்? யோசித்துப் பார். இதுதான் கிராமம்” என்று தன் கண்பனுடைய கருத் தையே எதிரொலித்தான் வேலுசாமி. கோடை விடுமுறைக்காகக் கொங்குகாட்டிலுள்ள் தன் சொந்தக் கிராமத்திற்கு வரும்போது, வேலுசாமி பட் டணத்திலிருந்து தன் கல்லூரி நண்பன் சுந்தரேசனேயும் அழைத்து வந்திருந்தான். சுந்தரேசன் கிராமத்தை இது வரையில் பார்த்ததே இல்லை. காட்டுப்பாளையம் என்ற இந்த ஊரைத்தான் அவன் முதல்முதலில் பார்க்கிருன். அவன் பட்டணத்திலே பிறந்து பட்டணத்திலேயே வளர்க் தவன். அதனல் முதலில் அவனுக்குக் கிராம வாழ்க்கை, பழக்க வழக்கங்கள் எல்லாம் புதுமையாகவும் மனத்திற்கு உற்சாகம் அளிப்பன வாகவும் தோன் றின. ஆனல் விரை விலேயே அவனுக்குக் கிராமம் புளித்துப் போய்விட்டது. சுகாதார வசதிகள் குறைந்த கிராமத்து வீடுகளையும் சந்து பொந்துகளேயும்விட, கிராம மக்களின் குருட்டு நம்பிக்கை கள் அவனுக்கு அதிக வெறுப்பை உண்டாக்கின. அவன் நண்பன் வேலுசாமி கிராமத்தில் வளர்ந்தவனுைலும் அவ. னுக்கும் கிராமம் பிடிக்கவில்லை. பட்டணத்திற்குப்போய் நான்கு வருஷங்கள் வாழ்ந்ததன் பயனக வேலுசாமிக்குக்