பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி வாக்கு 41 கிராம வாழ்க்கையே அநாகரிகமானது என்ற எண்ணம் வளர்ந்துவிட்டது. அதனல் அவன் கிராமமென்ருல் அதை எல்லா அம்சத்திலும் பழித்துக் கூறத் தயங்கமாட்டான். பக்கத்து ஊரிலே மாடுகளுக்குக் கோமாரி நோய் அந்தச் சமயத்திலே பரவியிருந்தது. அது இந்த ஊரிலும் பரவாமல் தடுப்பதற்காகப் பூசாரி சொன்னபடி காட்டுக் கறுப்பண்ணனுக்குப் பூசை போடுவதற்காக ஊர் மக்க ளெல்லாம் ஏற்பாடு செய்துகொண் டிருந்தார்கள். அதைக் கண்டுதான் நண்பர்கள் இருவருக்கும் கோபம் பொங்கி எழுந்தது. "கிராம்மென்ருல் இப்படி எல்லாம் குருட்டு கம்பிக்கை களும் மூடப் பழக்க வழக்கங்களுமாக இருக்குமென்று கான் கினைக்கவே இல்லை' என்ருன் சுந்தரேசன். 'இதற்கெல்லாம் தயாராகத்தான் வரவேண்டும் என்று புறப்படும்போதே நான் உனக்கு எச்சரிக்கை பண்ணவில் லேயா?” என்று வேலுசாமி கேட்டான். "இருந்தாலும் இத்தனை மோசமாக இருக்குமென்று கான் கினைக்கவே இல்லை” என்ருன் பட்டணத்து நண்பன். இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே கட்டி லில் படுத்திருந்த வேலுசாமியின் பாட்டனர், 'ஏன் அப்பா, பட்டணத்திலே குருட்டு நம்பிக்கையே கிடையாதா?” என்று கேட்டார். அந்தக் கேள்வியை நண்பர்கள் எதிர்பார்க்கவில்லை. பாட்டனர் படுத்திருந்ததைக்கூட அதுவரையில் அவர்கள் கவனிக்காமல் தங்களுடைய பேச்சில் மூழ்கியிருந்தார்கள். * மறு நேரம் அங்கு மெளனம் நிலவியது. வேலுசாமிதான் அந்த மெளனத்தைக் கலைக்கத் சினிந்தான்; "பட்டணத்திலே இப்படிக் கிடையவே கிடை "து” என்று அவன் கூறினன்.