பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி வாக்கு 43: இாளாக ஆசை. விவரமாகச் சொல்லுங்கள்” என்று வேலு: சாமியும் அவள் விஷயத்திலே ஆர்வம் காட்டின்ை. தாத்தா கதை சொல்லுவதிலே கெட்டிக்காரர். அவர் ஆரம்பித்தார் : “கல்லாயிக்கு அருமையாக ஒரே குழந்தைதான் பிறக் தது. அப்பொழுதே அவளுக்கு காற்பது வயசாகிவிட்டது. பையன் பிறந்த அடுத்த வருஷத்திலேயே அவள் புருஷன் இறந்து போனன். அவர்களுக்குச் சொத்து சுகம் இல்லை; குடியிருக்கிற குடிசைதான் உண்டு. கூலி வேலை செய்து இருபது வருஷம் எப்படியோ அவள் அந்தப் பையனைக் காப்பாற்றினுள். அவனுக்குப் பேர் முத்துசாமி.” 'அந்தப் பையன் ஒன்றும் சம்பாதிக்கவில்லையா?” என்று வேலுசாமி இடைமறித்துக் கேட்டான். "அவன் பிறந்ததிலிருந்தே ஒரு மாதிரி புத்தி சுவா தினம் இல்லாமல் இருந்தான். ஆனல் அவனைச் சுத்தப் பைத்தியம் என்றும் சொல்லமுடியாது. நாலு கேள்வி கேட்டால் ஒரு வார்த்தையாலே ஏதாவது பதில் சொல்லு வான். தாளுகவே சிரித்துக்கொள்வான். ஏதாவது வேலை சொன்னல் ஒன்றுக்குப் பாதியாகச் செய்வான். அவ்வளவு தான். என்னவோ மூளைப் பிசகு. டையன் அப்படி இருந்தாலும் கல்லாயிக்கு அவன் மேலே உயிர். அவனுக்கு ஒரு கல்யாணம் செய்து வைத் துக் குழந்தையும் குட்டியுமாகப் பார்க்க வேணுமென்று அவளுக்கு ஒரே ஆசை. ஆனல் புத்திசுவாதீனம் இல்லாத வனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? சொத்து இருந்தாலும் அதற்காகவாவது யாராவது பெண்ணைக் கொண்டுவந்து தள்ளுவார்கள். சொத்தும் இல்லை. அதனலே கல்லாயி முதலில் பையனுக்குப் புத்தி தெளிவதற்காக ஏதாவது இசய்ய வேண்டுமென்று தீர்மானித்தாள். இந்த ஊரி லிருந்து எட்டு ம்ைலில் பூசாரித் தோட்டம் என்று ஒரு