பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி வாக்கு 45 "அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. வயசாகி யிருந்தா லும் உடம்பிலே புதிய தெம்பு ஏற்பட்டது. இருந்தாலும், அவளால் நாலு கிடாரிகளே வாங்கவோ மேய்க்கவோ முடி புமா? அதனல் அவள் முதலில் ஒரு கிடாரி வாங்குவதென்று தீர்மானம் செய்தாள். அதற்குக்கூட அவளிடம் பணம் இல்லை. கூலி வேலையில் தினமும் கிடைக்கிற பணம் இரண்டு ஜீவன்கள் வயிறு கழுவவே சரியாக இருந்தது. அதில் மிச்சம் பிடித்துத்தான் சீலைத் துணியும் வாங்கவேண்டும். பிறகு எப்படிக் கிடாரி வாங்குவது? அதனல் கல்லாயி புதிய வரும்படி கண்டுபிடிப்பதற்குப் பல வகைகளிலும் யோசனை செய்து பார்த்தாள். அதோடு இரவிலே கஞ்சி மட்டும் குடிப்பதென்றும் முடிவு செய்தாள். இரவிலே மூன்று நான்கு மணி நேரம் நூல் நூற்ருல் அதிலிருந்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம் என்று அவளுக்குத் தெரியவந்தது. அவள் நூற்க ஆரம்பித்தாள். இப்படியாக ஆறு மாசத்திலே முப்பது ரூபாய் மிச்சம் பிடித்து, ஒரு நல்ல இளங்கிடாரி வாங்கினுள். வேலைக்குப் போகும்போது அதைக் கூடவே டித்துக்கொண்டு போய்ப் பக்கத்திலே மேய விடுவாள். ாலேயிலே திரும்பும்போது பிடித்துக்கொண்டு வருவாள். இரவிலே நூல் நூற்பாள். அந்தக் கிடாரி பெரிதாகிப் லனுக்கு வரும்போது அதை விற்றுவிடவேண்டும். சிற்றுக் கிடைக்கும் பணம் முழுவதையும் பூசாரிக்குக் 'காடுத்துவிடவேண்டும். வேருெரு கிடாரி வாங்க உடனே 1ணம் வேண்டுமே, அதற்காகத் தொடர்ந்து நூல் நூற்று 1ாலாள்ை. எங்கிருந்து அவளுக்கு உடம்பிலே சக்தி வங் தோ தெரியாது. பகலெல்லாம் கழனியிலே கூலி வேலை; இரவிலே நூல் நூற்பது. இப்படிச் சதா உழைத்துவந்தாள். "இரண்டு வருஷத்திலே கிடாரி பெரிதாகிப் பலனுக்கு 'தது. அதைச் சந்தையிலே விற்றுக் கிடைத்த 150 'ாயை அப்படியே பூசாரிக்குக் கொண்டுபோய்க் கொடுத் ாள், c- -