பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 காளிங்கராயன் கொடை தெளிவு ஏற்பட்டுவிடும் என்ற ஒரே நம்பிக்கை அவள் உயிருக்கு ஊட்டம் கொடுத்து வந்திருக்கிறது. கடக்கும் போது அவள் தள்ளாடுவதைப் பார்த்தவர்கள், இவள் எப்படி அவ்வாறு பத்து வருஷம் இராப் பகலாக உழைத் திருக்க முடியும் என்று சந்தேகிப்பார்கள். 'மெதுவாக கடந்தாலும் தாயின் வாழ்க்கை அநுபவங் களேயெல்லாம் கேட்டுக்கொண்டு சென்ற முத்துசாமிக்குச் சலிப்பே தோன்றவில்லே. இருந்தாலும், திரும்பும்போது வாடகை வண்டி ஒன்று ஏற்பாடு செய்துவிட வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். 'பூசாரித் தோட்டத்திலே துழைந்ததும், பூசாரி எங்கிருக்கிருர்? என்று கிழவி அங்கு எதிர்ப்பட்ட ஒர் ஆளே விசாரித்தாள். 'எந்தப் பூசாரி' என்று அந்த ஆள் கேட்டான். “ அவர்தான் அப்பா, வாக்குச் சொல்லுவாரே, அந்தப் பூசாரிதான்' என்ருள் கல்லாயி. "அவரா? அவர் செத்துப் பன்னிரண்டு வருஷமாச்சே!' என்ருன் அந்த ஆள். 'இல்லையப்பா, பத்து வருஷத்துக்கு முன்னே எனக்கு அவர் வாக்குச் சொன்னர். அதன் பிரகாரம் நான் மூன்று தடவை இங்கு வந்து அவருக்குக் காணிக்கை செலுத்தி யிருக்கிறேனே? என்று கல்லாயி சொன்னுள். " சரி சரி, பாட்டி. உன்னைத்தான அந்தப் படுபாவி ஏமாற்றினன்? பூசாரி செத்துப்போன பிறகு அவளுேடு இருந்த ஆள் ஒருத்தன் பூசாரி குகைக்குள் இருந்து வாக்குச் சொல்லுவதாகக் கூறி எல்லோரையும் ஏமாற்றிக்கொண் டிருந்தான். கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு நிலக்கும்? போன மாசந்தான் அவன் குட்டு வெளியாச்சு