பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி வாக்கு 51 அதல்ை ஊர்க்காரரெல்லாம் அவனை மிரட்டினர்கள். அவன் எங்கேயோ யாருக்கும் தெரியாமல் ஒடிப் போய் விட்டான்' என்ருன் அந்த ஆள். 'என்ன, அப்போது எனக்குப் பூசாரி வாக்குக் கொடுக்கவில்லையா? என்று திடுக்கிட்டுக் கேட்டாள் நல்லாயி. 'அவ்வளவுதான். அந்த கிமிஷத்திலேயே அவள் மனம் குழம்பிப் போய்விட்டது. இன்னும் உயிரோடுதான் இருக்கிருள். இருந்தாலும் அவள் பழைய கல்லாயியாக இல்லை. ஆனல் அவளுடைய அதிருஷ்டம் முத்துசாமி அவளே உயிராக மதித்துக் காப்பாற்றி வருகிருன்” என்று முடித்தார் பாட்டனர். * . , "தாத்தா, அப்படியானல் எங்கள் கட்சிதானே வென் றது? பூசாரி வாக்கெல்லாம் வெறும் ஏமாற்றம் என்று தெரிந்ததல்லவா?” என்ருன் வேலுசாமி. --- - பூசாரி வாக்குப் பொய்யோ மெய்யோ, அதைப்பற்றி இப்போது பேச்சில்லே. பூசாரி சொன்னதாக அந்த ஆள் சொன்னதைக் கிழவி முழுவதும் நம்பினள். அது குருட்டு நம்பிக்கையாக இருந்தாலும் அதனலே கிழவியின் ஆசை பூர்த்தியாயிற்ருே இல்லையோ? அதைப்பற்றித்தானே பேசி ஆரம்பித்தது?" என்று தாத்தா கேட்டார். வேலுசாமியும் சுந்தரேசனும் சிந்தனையில் மூழ இஞர்கள். - -