பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை நன்கு அமைந்த எளிய தமிழ் நடையில் சிறு கதைகளைச் சுவைபடச் சொல்வதில் பூரீ தூரன் நிபுணர். கதை இன்பத்துக் காகவே அவைகளைப் படிக்கலாம். அத்துடன் சிந்தனையிலும் மனத்தத்து வங்களிலும் தோய்ந்த அவர் மனம் பல பிரஸ்னைகளைக் கிளப்புகிறது; உயரிய பல கருத்துக்களை நூல் நெடுகிலும் தெளித்து விடுகிறது. 'சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடாது' என்ற உண்மையை உணர்ச்சி தோன்ற வெளிப் படுத்தும் "காளிங்கராயன் கொடை" இத் தொகுதிக்கு ஒரு சிகரம்போல் அமைந்து, அதன் தலைப்பாகவும் திகழ்கிறது. இச் சிறுகதைத் தொகுப்பை மகிழ்ச்சி யோடு வாசகர்களுக்கு அளிக்கிருேம். அமுத நிலையத்தார்