பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசாதம் ஆசிரமத்தில் பூஜை ஆழ்ந்த பக்தியோடு கடந்தது. கருணுனத்த சுவாமிகள் தீபாராதனை முடிந்ததும், தாம், புதிதாக அழைத்து வந்திருந்த பக்தருக்கு அன்போடு பிரசாதம் வழங்கினர். பக்தரும் தமது இரு கைகளேயும் ஏக்தி மரியாதையாகப் பெற்றுக்கொண்டார். சுவாமிகள் தாமாகவே சிரமப்பட்டுத் தேங்காய் லாடு செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வார்; பிறகு அதைப் பிரசாதமாக அங்கு வருபவர்களுக்கெல்லாம். மகிழ்ச்சியோடு அளிப்பார். ஊர் ஊராய்ச் சென்று உபக் கியாசங்கள் புரிவதிலும், புதிய புதிய பேர்வழிகளே ஆசிர மத்திற்கு வரும்படி செய்து அவர்களுக்கு ஆன்ம விஷயங். களேப் போதிப்பதிலும் கருணுனந்த சுவாமிகளுக்கு இருந்த ஆர்வம் இவ்வளவென்று சொல்லி முடியாது. வருகின்ற். அத்தனை பேருக்கும் பிரசாதம் என்றும் தயாராக இருக் கும். மக்கள் கூட்டங் கூட்டமாக ஆசிரமத்திற்கு வந்து ஆன்ம ஞானம் பெற்று உய்ய வேண்டுமென்று அவருக்குப் பேராசை. அதற்காக அவர் எவ்விதமான சிரமத்தையும் மேற்கொள்ளச் சித்தமாக இருந்தார். ஆனல் அவருடன் இருந்த சுயம்புலிங்க சுவாமிகளுக்கு, இது பிடிக்கிறதில்லை. இந்தச் சாது ஏன் இப்படி எல்லா மனிதர்களையும் உய்விக்க வேண்டுமென்று திரிகிருர்? அது அவ்வளவு சுலபமாக முடிகிற காரியமா என்ன? எவ்வளவு கான் விஷயங்களே அறிந்திருந்தாலும் துறவிக்குக்கூட இவ்வித சபலம் இருக்கின்றதே" என்று அவர் பற்றற்றவர் போல நினைத்துக் கொண்டிருப்பார்.