பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 காளிங்கராயன் கொடை சில வேளைகளில் இருவருக்கும் இதுபற்றி விவாதம் வந்துவிடும். கருனைந்த சுவாமிகள் மிக உற்சாகத்தோடு தமது முயற்சி சரியானதென்று எடுத்துப் பேசுவார்; சுயம்புலிங்க சுவாமிகள் அமைதியாகச் சில வார்த்தை களால் தமது நோக்கத்தை வெளியிடுவார். முன்னவர், பேச்சில் ஆர்வம் ததும்பும்; பின்னவர் வாக்கில் தெளிவு முன்னிற்கும்; பேசுகின்றபோதே இதழ்களில் ஒரு மங்காத இள நகை தவழ்ந்து கொண்டிருக்கும். - கருணுனத்த சுவாமிகள் தாம் சென்று பிரசங்கம் செய்த ஊர்களைப் பற்றியும், அழைத்து வந்த மக்களைப் பற்றியும் உற்சாகமாகப் பேச ஆரம்பிப்பார். "ஏன் இப் படி விணுகக் காலத்தைப் போக்குகிறீர்? ஆன்ம ಥಿಕ್ಶಶಿಪ್ಟ್ யில் ஈடுபடுவதை விட்டுவிட்டு ஊரூராகப் போய் எல்லேர் ரையும் இங்கே இழுத்துக்கொண்டு வருகிறீரே?” என்பா சுயம்புலிங்க சுவாமிகள். உடனே வாக்குவாதம் ஆரம்ப மாகிவிடும். 'கான் மட்டும் ஆன்ம ஞானம் பெற்ருல் போதுமா! நான் பெறும் இன்பத்தை இவ்வுலகமும் பிரசாதமாகப் பெற வேண்டாமா?” - "இப்படி வருக்தி அழைத்து வந்தவர்களெல்லாம் ஆன்ம ஞானம் பெற்றுவிடுவார்களோ ?” - "ஏன் பெறமாட்டார்கள்? முயற்சி இருந்தால் நிச்சய மாகப் பெறுவார்கள். அந்த முயற்சிக்குத் துாண்டுகோலாக கான் இருக்க விரும்புகிறேன்.” 'ஆன்ம ஞானத்தில் நாட்டம் உள்ளவன் உம்மைத் தேடித் தானே வரமாட்டான ?” "அவன் வந்தாலும் சரி, வராவிட்டாலும சா. நான்ே போய் எல்லோரையும் அழைத்து வருவதில் என்ன குற்: மிருக்கிறது? அவனே வர வேண்டுமென்று கட்டாயமா?"