பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசாதம் ?3 அடியேன் ராமசாமி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து rழுதிக் கொண்டதாவது. நான் அன்று தங்கள் ஆசிரமத்திற்குப் பூஜை நேரத் தில் வந்து தரிசனம் செய்து விட்டுப் பிரசாதம் பெற்றுத் கிரும்பியதை என்றும் மறக்கவே மாட்டேன். அங்கு வந்து திரும்பியது முதல் என் உள்ளத்தில் அடக்க முடியாத ஆவலொன்று தோன்றியிருக்கிறது. அதை எவ்வகை ாலும் என்னல் தடுக்க முடியவில்லை. அதல்ை அடிக்கடி அங்கு வரலாமென்ற ஆசை பிறக்கின்றது. இருந்தாலும் தூரத்தை உத்தேசித்தும், இங்குள்ள பல வேலைகளே உத் தேசித்தும் வர இயலாதிருக்கின்றது. இருப்பினும் அது பற்றித் தங்களிடம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பேராவலோடு இருக்கிறேன். ஆனல் தங்களுக்கு எத்தனேயோ அலுவல்கள் இருக் கும். அவற்றிற்கிடையே நான் தங்களுக்குத் தொந்தரவு கொடுப்பது சரியல்ல வென்று அஞ்சுகிறேன். தாங்கள் ான்னைப் போன்ற பாமரர்கள் சந்தோஷ மடைய வேண்டு மென்ற ஒரே நோக்கத்துடன் வாழ்ந்து வருவதால் தங்க ளுடன் சொல்லுவதனால் தவறில்லை என்றும் தோன்று கிறது. எப்படி இருந்தாலும் இவ்வேழையின் மனே பீஷ்டத்தை நிறைவேற்றி வைப்பது தங்களாலேயே ஆகும். ஆதலால் தாங்கள் அனுமதி கொடுத்தால் மறு தபாலி லேயே எனது ஆவலேத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இப்போது அங்கு வருவதற்குச் சமயம் இல்லாததால் ாேன் தபால் எழுதுகிறேன். ஏதேனும் பிழையிருக்கு விால்ை பொறுத்தருள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். - தங்கள் பதிலே எதிர்பார்க்கும் அடியேன், ராமசாமி.”