பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காளிங்கராயன் கொடை ராமசாமிக்கு வாழ்க்கையே பயனற்றதாகத் தோன்றி, யது. கிலத்திலே வேளாண்மை நடைபெருத காலத்திலும் பட்டியிலே மாடுகளிருக்கும்போது அவற்றைக் கவனிக்க வேண்டிய வேலையிருந்தது. இப்பொழுது அந்த வேலையும் கிடையாது. காலையிலிருந்து மாலைவரை பொழுதுபோவதே கஷ்டமாக முடிந்தது. ராமசாமிக்குச் சீட்டாட்டமே இது வரையில் தெரியாது. சீட்டாடுகிற பக்கத்திற்கே அவன் போகமாட்டான். வாழ்க்கையே வெறிச்சென்று போன தோடு பொழுதைப் போக்கவே முடியாத நிலைமையிலே, ராமசாமி மற்றவர்களோடு சேர்ந்து சீட்டாடப் பழகிக் கொண்டான். சிட்டாடும்போது வாயிலே பீடியில்லாமல் முடியுமா? அதையும் பழகிக்கொண்டான். சீட்டாட்டக் கூட்டத்தின் பேச்சும், குதும், குடி வெறியும் முதலில் அi னுக்கு அருவருப்பாக இருந்தன. ஆல்ை வர வர எல்லாம் பழகிப்போய்விட்டது. நிலத்தை எட்டிக்கூடப் பார்க் காமல் நாள் முழுவதையும், சில நாட்களில் இரவில் வெகு நேரத்தையும் அவன் இந்தக் கூட்டத்திலே கழித் தான். அவன் மனைவிக்கு அவன் போகிற போக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. பல வழிகளிலே அவள் ராமசாமிக்கு எச்சரிக்கை செய்து பார்த்தாள். ஒன்றும் பலனளிக்கவில்லே. மாடுகள் போனதோடு அவனுடைய மனத் தெளிவும் போய்விட்டது. எது நல்லது, எது கெட் டது என்று எண்ணிப் பார்க்கவே அவனுக்கு இப்பொழுது விருப்பமில்லே. சிட்டாடுவதென்ருல் அதற்குக் காசு வேண்டாமர் அதிலும் ராமசாமிக்கு இது புதிய பழக்கமாகையர் தினமும் பெருத்த கஷ்டமடைந்து வந்தான். கடலு கைமாற்றும் வாங்க முடிந்த இடங்களிலெல்லாம் வாங் யாய்விட்டது. வாக்குத் தவருத அவன் இப்பொழு ஒவ்வோரிடத்திலும் பொய் பேச வேண்டியதாயிற்: