பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 காளிங்கராயன் கொடை புதரில் பிறந்தேன்" என்பான். காட்டுப்பாளையத்து மக்க ளுக்கு இந்தப் பதிலும் மாருத சிரிப்பைக் கொடுக்கும். இசாங்கப்பன் பார்ப்பதற்கு மனித வடிவத்திலே இருந் தாலும் எருமை மூளை படைத்தவன் என்பது காட்டுப் பாளையத்திலே பொதுவான அபிப்பிராயம். ஆனல் இப்பொழுது அது மாறிவிட்டது. சொங்கப்ப னிடத்திலே எல்லோரும் மரியாதை காட்டத் தொடங்கி விட்டார்கள். யாரும் அவனே இப்பொழுது கேலி செய்வ. தில்லை. இந்தவிதமான மாறுதல் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. ஆப்பக்காரி ராமாத்தாள் என்ருல் அந்த வட்டாரத். தில் எல்லோருக்கும் தெரியும். அவள் தயாரிக்கிற ஆப்பம் அத்தனை பெருமை வாய்ந்தது. அதை ஒரு தடவை வாங்கி உண்டவன் அவளே மறப்பதில்லை. ராமாத்தாள் அரைத்த அரிசி மாவைக்கொண்ட சட்டி யும் கூடையுமாகக் கால ஏழு மணிக்கெல்லாம் சந்தைப் பேட்டை முக்கிற்குப் புறப்பட்டு விடுவாள். காட்டுப்பாளை யத்திலிருந்து அந்த இடம் சுமார் அரை மைல் இருக்கும். அங்குதான் அவள் வியாபாரமெல்லாம். சுமார் பத்து மணி வரையிலும் அந்த வழியிலே வருகிறவர்களில் பலர் அவள் உட்கார்ந்திருக்கிற வேப்ப மரத்தடியில் ஆப்பம் வாங்கிச் சாப்பிடுவதற்காகத் தங்குவார்கள். சுறுசுறுப்பாக வியா பாரம் நடக்கும். ராமாத்தாளுக்குப் பகலெல்லாம் வேலையிருக்கும். பத்து மணிக்கு ஆப்பக் கடையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் சமையல் செய்யத் தொடங்குவாள். சமைத்துச் சாப்பிட்டதும் வெற்றிலே போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருப்பாள். பிறகு அடுத்த நாள் வியாபா