பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னே தந்த ஒளி 5 ரத்துக்காக மாவரைக்கத் தொடங்கி விடுவாள். வீட்டிலே அவளுக்கு உதவி செய்ய யாரும் கிடையாது. கலியாணம் ஆகி இரண்டு வருஷங்களுக்குள்ளே அவள் விதவை யாள்ை. குழந்தைகளும் இல்லை. அவளேக் கவனிப்பதற்கு வேறு சுற்றத்தாரும் இல்லை. இப்படி நாள் முழுதும் வேலை செய்தாலும் அவளுக் குச் சலிப்புக் கிடையாது. அவளுடைய இருண்ட வாழ்வை மறக்க வேலேதான் ஒரே வழியாக இருந்தது. வருஷக் கணக்காக அவள் இப்படி வாழ்க்கை கடத்தி வந்தாள். தள்ளாத வயது வந்த காலத்திலும் அவள் ஆப் பக் கடையை கிறுத்தவில்லை. ஆனல் காட்டுப்பாளையத்தி லிருந்து சந்தைப்பேட்டைக்கு அரிசி மாச் சட்டி, அடுப்பு முதலிய சாமான்களே எடுத்துக்கொண்டு போவதுதான் பெரிய பிரச்ன்ையாகிவிட்டது. ஒரு நாள் காலையில் ராமாத்தாள் சட்டியிலுள்ள அரிசி மாவைக் கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு தடுமாறித் தடுமாறிச் சந்தைப்பேட்டைக்குப் போவதைச் சொங்கப் பன் தற்செயலாகப் பார்த்துவிட்டான். அவள் கொஞ்ச தூரம் சென்று பாதை வளேவிலே மறையும் வரையில் அவ ளேப் பார்த்துக்கொண்டு அவன் மெளமாக கின்றுகொண் டிருந்தான். அவன் மனத்திலே என்ன சிந்தனே உதய மாயிற்ருே தெரியாது. திடீரென்று அவளே நோக்கி வேக மாக நடக்கலானன். - ' சொங்கப்பா, ஆப்ப ருசி இழுக்குதா?’ என்று யாரோ கேட்டார்கள். அது அவன் காதில் விழவில்லை. ஆனல் ஆப்ப ருசி அவனே இழுக்கவில்லை என்பது மட்டும். ச்ேசயம். ஏனென்ருல் அவன் அந்த ஆப்பத்தை ஒருநாள் கூடத் தின்றதில்லை. r