பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளிங்கராயன் கொடை 93: காளிங்கராயன் வமிசத்தார் நம்ம பக்கத்திலே தண், னிர்கூடத் தொடமாட்டார்கள்” என்ருள் அவள். - "ஏன், அவர்களும் நம்மைப் போல வேளாளக் கவுண்டர்கள்தானே? நம்மை விட உயர்ந்தவர்களா? அப்படி ஒன்னும் இல்லே. ஆனல் காளிங்கராயக் கவுண்டர்தான் அந்தக் காலத்திலே சுமார் நூறு நூற்றம். பது வருசத்துக்கே முன்னேலே நம்ம ஊருக்கு வாய்க்கால் வெட்டி வச்சார். அந்த வாய்க்காலிலிருந்து தண்ணிர் பாஞ்சுதான் நம்ப ஊரிலே நெல் விளேயுது.” “அது எனக்கும் தெரியும். அதனால்தான் இந்த வாய்க் காலுக்குக் காளிங்கராயன் வாய்க்கால் என்று பெயர் வங். திருக்கிறது. பவானி ஆறு காவிரியில் சங்கமமாகிற இடத். திலிருந்து வாய்க்கால் கொண்டு வந்திருக்கிருர்கள்" என்று. கான் மேலும் விளக்கம் கூறினேன். "ஆமாம். இந்த வாய்க்கால வெட்டி வச்சதும் அந்த வமிசத்தார் எல்லோரும் மேற்கே குடிபோய்விட்டார் களாம். தருமத்திற்காக அவர்கள் வெட்டிய வாய்க்காலி லிருந்து தண்ணிர் பாஞ்சு விளேகிற அரிசியை அவுங்க. சாப்பிடமாட்டாங்களாம். அப்படி சாப்பிட்டால் தருமம். கெட்டுப்பேர்குமாம். அந்த வமிசத்திலே இப்போ ஏழையா இருக்கிறவங்ககூட நம்ம பக்கத்திலே தண்ணிர் கூடக் குடிக்க மாட்டாங்கோ.” "அப்படியா?” என்று கான் ஆச்சரியத்தில் முழுகிவிட். டேன். எனக்கு அதற்கு மேலே சாப்பிடக்கூட முடிய வில்லை. அவசரம் அவசரமாக ஒருவாறு உணவை முடித் துக்கொண்டு அந்தக் கிழவர் தூங்குவதற்குமுன் அவரை கன்ருகப் பார்க்க வேண்டுமென்று வந்தேன். 'ஏனுங்கோ, இந்தப் பக்கம் வர்ரபோது உங்கள் விட். 4.லேயே செய்த கட்டு சோருவது கொண்டு வரலாமே?