பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இலக்கியத்தில் பலவகையான துறைகளுண்டு சிறு கதை அவற்றிலே ஒன்று. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனி இலக்கணம் உண்டு தனிச் சிறப்பும் உண்டு. சிறு கதைக்கும் அவ்வாறுதான். - (சிறுகதை வாழ்க்கையின் முழுப்படலமல்ல. அது வாழ்க்கையிலே ஒரு சிறிய, மிகச் சிறிய காட்சி. பலவித மான வண்ணங்களுடைய மலர்களையும் இலைகளையும் கொண்டு தொடுத்த மாலையாக வாழ்க்கையைக் கற்பனை செய்தால் அந்த மாலையிலே ஒரு தனி மலருக்குச் சிறு கதையை ஒப்பிடலாம். அதற்குத் தனி உருவம் உண்டு நிறமுண்டு, மணமுண்டு. வாழ்க்கை என்னும் சுவைமிக்க விரிந்த ராக ஆலாபனையிலே குறிப்பிட்ட ஒர் அற்பு மான சஞ்சாரம் சிறுகதை. - சிறுகதையின் இலக்கணத்தை இவ்வாறு ೧೩೧75೧ கொண்டே போகலாம். கற்பனைத் திறன் மிக்க ஒருவன் அதற்குப் புதிய புதிய அழகுகளை வகுக்கலாம்: பிலே, வெளித் தோற்றத்திலே புதுமைகளைப் புகுத்த லாம். என்ருலும் அதன் அடிப்படைக் கட்டுக்கோப்பு அநேகமாக மாருமல்தானிருக்கும். வாழ்க்கையிலே ஏற்படும் சம்பவங்களுக்கு முக்கியத் துவம் கொடுத்து அவற்றின் பின்னல்களிலே சுவை, தோன்ற எழுதுவது ஒரு வகை: மனத்திலே பொங்கும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றின் குமுறல்களைப் படம் பிடித்து எழுதுவது மற்ருெரு '! பின்னல் கூறிய இந்த வகையிலேதான் எனக்குப் ಕ್ಲಿಕ್ಕಿ தல் அதிகம். அதிலும் மனத்தின் மறைந்து கிடக்கு பாகமாகிய மறை மனத்தின் வஞ்சகங்களை, இ சேஷ்டைகளை ஆதாரமாக வைத்து எழுதுவதிலே அலாதி யான் ஆர்வம் எனக்கு. பின்னணிக் காட்சி கிராமம்?