பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கச் சங்கிலி வாழ்க்கை ஒரு பெரிய சிக்கலான சோதனை. அதிலே வெற்றி பெறுவது அவ்வளவு எளிய காரிய மல்ல. சதா விழிப்போடிருக்க வேண்டும்; நெருக்கடி பான நிலைமைக்ளிலும் மன உறுதியைத் தளரவிடக் கூடாது ; இல்லாவிட்டால் அந்த சோதனையிலே ஏமாந்து போக நேரிடும். இப்படி உபதேசம் செய்வது மிக எளிது; ஆனல், அதைப் பின்பற்றி நடப்பது அவ்வளவு எளிதல்ல. ஏவ்வளவு பெரிய சோ த னை ஏற்பட்டாலும் நேர்மையிலே தவருமல் மன உறுதியோடு நடக்க வல்லவர்களை அ னை வ ரு ம் பாராட்டுகிருர்கள் மகான்கள் என்றுகூடப் புகழ்ந்து பேசுகிருர்கள் கிருஷ்ணசாமி தன்னை யாரும் மகான் என்று போற்ற் வேண்டும் என்று ஒருநாளும் எதிர்பார்க்க வில்லை. இருந்தாலும் அவன் இதுவரை தனது மனச் சாட்சிக்கு விரோதமாக எந்தக் கெட்ட காரியமும் செய்தது கிடையாது ; நேர்மையற்ற செயலை மனத் தாற்கூட அவன் தீண்டியதில்லை. - ஆனால், இன்று அவன் மனம் மாறிவிட்டது. தன்னைத் தத்தளிக்க வைத்த இந்த சமூகத்தைப் :பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று அவன் தீர் மானித்து விட்டான். அதற்குக் காரணமாகச் சற்று இன்புதான் ஒரு சம்பவம் நடைபெற்றது. பட்ட இனத்துக் கடைத் தெருவிலே இப்படிப்பட்ட சம்ப இங்கள் சர்வ சாதாரணம்; ஆனால், கிருஷ்ணசாமிக்கு இதுவே முதல் அனுபவமாகையால் அவன் மன் இடைந்து போனன்,