பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காளிங்கராயன் கொடை ஒன்றிரண்டு நாட்களில் இது ஏற்படவில்லை. இரண்டு வருஷங்களாக நாள் தவறினலும் சொங்கப்பன் தவருது செய்து வந்த காரியம் அந்த உணர்ச்சியை உறக்கத்தினின் றும் தட்டி யெழுப்பியது. - ராமாத்தாள் சொங்கப்பனே ஆப்பங் தின்னும்படி கூப் பிடுவதைக்கூட மறந்து விட்டாள். அப்படி அழைப்பது வீண் என்றும் அவளுக்குத் தெரிந்துவிட்டது. ஆனல் அவன் அவளுடைய உள்ளத்திலே ஒட்டிக்கொண்டு விட் டான். சங்கம் புதளிலே பிறந்தவன் என்று அவனே யாரா வது கேலியாகப் பேசுவதைக் கேட்டால் அவள் நெஞ்சம் சங்கம்புதர் முள்ளாகக் குத்தத் தொடங்கியது. 'காய்க் குட்டியைச் சங்கம்புதரிலே போடுகிறவன் மனிதன? அவன் மிருகத்துக்கும் கீழானவன்' என்று அவள் அடிக்கடி முணுமுணுப்பாள். அதைக் கேட்டவர் கள் அவள் ஏன் இப்படிப் பிதற்றுகிருள் என்று ஆச்சரி யப்படுவார்கள். - முன்பெல்லாம் ராமாத்தாள் யந்திரம்போலக் காரியம் செய்து வந்தாள். ஆப்டம் சுடுவதையும் வேறு வேலே செய், வதையும் அவளால் கிறுத்த முடியாது. நிறுத்தினல் உயிர் பாரமாக இருந்தது. ஆனால் இந்தப் புதிய உணர்ச்சி எழுந்த பிறகு அவளுடைய வேலைகளுக்கு ஒரு புதிய பொருளும், அவசியமும் ஏற்பட்டுவிட்டன; அதல்ை அவள் வாழ்க்கையிலே இன்பம் காணத் தொடங்கினுள். ஆனல் அந்த இன்பம் வெகுநாள் டிேக்கவில்லை. ராமாத்தாள் திடீரென்று ஒரு நாளிரவு காய்ச்சல் போட்டுப் படுத்துவிட்டாள். மறுகாட் காலேயில் வழக்கம்போலச் சொங்கப்பன் வாசலில் வந்து வெகு நேரம் காத்திருந்தான். அவன் வீட்டுக்குள் போகிற பழக்கம் இல்லை. "வீட்டுக்குள்ளே வா” என்று ராமாத்தாள் பலமுறை அழைத்ததுண்டு.