பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காளிதாசன் உவமைகள்

9னைவரும் பெற விரும்புவது திரு: கல்வி, குடிப்பிறப்பு, அரசு, செல்வம், அழகு, மன உறுதி, உடல் வலிமை, பொறை யாவுமே ஒன்று திரண்டது அத் திரு தாமரையில் இருப்பதாகக் கவிஞர் கூறுவர் பழைய பூவை விட்டுப் புதுமலரை நாடுவது அதன் இயல்பு.


திலீபனைச் சிறிது காலம் திரு அடைந்திருந்தாள்; அவனிடம் தோன்றிய இரகுவுக்குப் பருவம் வந்ததும் அத்திரு பழைய மலரை நீக்கிப் புது மலரை அடைவதுபோல இரகுவை வந்து அடைந்தாள். ர. 3:36


வர்ச்சிப் பெண் ஒருத்தி தன் காமக்கலையால் கணவனைத் தன் வயப்படுத்துவதுபோல, வேட்டை தசரதனைத் தன்வயப்படுத்தியது இன்பம் துய்ப்பதால் காமவேட்கை வளர்வதுபோல், வேட்டைமீது உள்ள அளவு கடந்த ஆசையால் தசரதனுடைய வேட்டை வேட்கை வளர்ந்தது; குறையவில்லை அரசை அமைச்சரிடம் ஒப்புவித்து, அம் மன்னன் அவ் இன்பத்தில் திளைத்திருந்தான். ர. 9.74


பிருது ஓர் அரசன் அவன் நிலத்தை உழுது பயிரிட்டு உணவு பெருக்கி, மக்கள் எவரும் பசியால் வருந்தாமல் காத்தவருள் முதல்வன் நிலத்தை பசுவாகவும், இமயத்தைக் கன்றாகவும் மேருவைப் பால் கறப்பவன் ஆகவும் ஆக்கி, நிலமடந்தை முலை சுரப்ப, உலகில் உள்ளனவற்றைக் கறந்து, மக்களுக்கு அளித்தான் ஒளிரும் மணிகளும் மருந்துகளும் கிடைத்தன அவன் கறப்பதில் வல்லவன்.


நிலத்திலிருந்து வெளிவந்தனவற்றுள் ஒருத்தி சீதை: இமயக் கன்று பசுவாகித் தந்த செல்வம் உமை இவர்களால் மனித குலம் உயர்ந்தது கு. 1.2


2. இயற்கை

மயமலை எண்ணற்ற நவமணிகளின் குவியல்: சிறப்புப் பொருள்களுக்கும் உறைவிடம் ஆனால் அங்கு ஒரு குறை உண்டு; அது பனிக்குளிர் இந்த ஒரு குறை இமயத்தின் பெருமையைக் கெடுக்குமா?காளி உ - 2காளி உ - 2