பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

11


றைந்திருந்த தசரதன் ஒலியைக் கொண்டே நீருண்ண வந்த யானை எனத் தவறாகக் கருதி சிரவண குமாரனை அம்பு எய்து கொன்று விட்டான். குமாரனுடைய தந்தையிடம் சாபம் பெற்றான். இதை வேறு எவரும் அறிகிலர்.

கடலுக்கு அடியில் வடவை என்ற ஊழித்தீ உள்ளது. பல ஆறுகளின் நீர் கணந்தோறும் கடலிற் பாய்ந்து கொண்டிருந்தாலும், அந்நீரால் கடல் பொங்காமல் காப்பது அத்தீ அத்தீ பரவாமல் காப்பது கடல் நீர் ஆயினும், ஊழிக்காலத்தில் அத்தீ பரவி, கடலையும் உலகையும் அழிப்பது உறுதி. தசரதன் மனத்தில் பாய்ந்த சாபம் யாரும் கண்டு அறியாத தீயாய் நின்றது. அவன் தண்மையும், பரப்பும், ஆழமும் உடைய கடலாக, அத்தீயைத் தாங்கும் ஆற்றல் படைத்திருந்தான். ஆனால், அக்கடல் ஒரு காலத்தில் வற்றப்போகிறது; சாபத்தீ ஒங்கப் போகிறது; இவன் அழியப்போகிறான். ர: 9:82

ன்னால் நிராகரிக்கப்பட்ட காதலியாகிய சகுந்தலையை எண்ணி வேறு எத்தொழிலிலும் ஈடுபடாமல், பித்தனைப்போன்று துஷ்யந்தன் இருந்தான். தேவர் தலைவன் அவனை யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்காக மாதவியை அனுப்பித் துண்டுகிறான்.

கிளறினால் தீ கொழுந்துவிட்டு எரியும்; அடித்தால் பாம்பு நிமிர்ந்து படம் எடுக்கும். கொழுந்தும் படமும் முறையே தீயிலும் பாம்பிலும் இயற்கையாக உள்ளனவே. எனினும், பிறர் துண்டுவதால் இவை வெளிப்படுகின்றன. மனிதப் பண்புகளும் கிளர்ச்சியால் ஓங்குகின்றன. சா. 6:31

ருவத்திற்கேற்ப உருவும் திருவும் ஒருங்கே பெற்ற இந்து மதி மகவைப் பெற்றபின் இளமையின் முழுப்பொலிவுடன் பூங்காவில் அஜனுடன் இன்பத்தில் திளைத்திருந்த பொழுது அவள் மீது ஒரு மாலை விழுந்தது; மாலையுடன் அவளும் மயங்கி வீழ்ந்தாள் இறந்தாள். அஜனும் இறந்து இந்துமதியின் மேல் வீழ்ந்தான்.

விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது; அது எண்ணெயுடனும் எரிகின்ற திரியுடனும் கவிழ்கிறது: ஒரு கணத்தே திரி அணைகிறது; கொட்டிய எண்ணெய் மட்டும் தனியே நிற்கிறது. ர. 8:38