பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

13


சீதை கருவுற்றவள் முன் வனவாழ்வில் நுகர்ந்த காட்சிகளையும் வனத்தில் உள்ள அன்னப்பறவைகள், அன்போடிருந்த பெண்கள்,தவ வனங்கள் ஆகியவற்றைக்கான விரும்பினாள்.தன் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே, இலக்குமணனுடன் தன்னைக் கங்கைக் கரைக்குக் கணவன் அனுப்புவதாக நினைத்துக்கொண்டிருந்தாள்: இராமனைக் கற்பகமாகவே கருதினாள். ஆனால், அவன் கத்தி போன்ற கூர்மையான இலைகள் உள்ள வாள் இலை மரமாக மாறியதை, பாவம் அவள் அறியவில்லை. ர. 14:48


ரே நீர்நிலையில் தாமரை ஒரிடத்தும் ஆம்பல் மற்றொரு இடத்தும் உள்ளன. விடியற்காலையில் தாமரை மலர்கள் அலர, ஆம்பல் மலர்கள் கூம்புகின்றன.


ந்துமதியின் திருமண மண்டபத்தில் அஜனை அவள் மலையிட்டதால் முகம் மலர்ந்த கூட்டம் ஒன்று; ஏமாற்றத்தால் வாடிய அரசர் கூட்டம் மற்றொன்று. ஒன்றின் மலர்ச்சியில் மற்றதன் வாட்டம் இயற்கை. ர.6:86


றுதியாகக் கட்டப்பட்ட பல மாடங்கள் கொண்ட அழகிய மாளிகை சிறந்த காவல் உடையது; அதன் மீது ஆலமரத்தின் சிறு விதை விழுந்து முளைத்துவிட்டது. என்ன முயன்றாலும் அவ்விதையில் தோன்றிய மரம் அம்மாளிகையை அழித்தே தீரும். விதை சிறிது:ஆனால் அழிவோ பெரிது. ர. 8:90


நாள் ஒளிவீசிய வெய்யோன் செக்கர் வானில் கறைபடிந்த கைகளுடன் மறையும் போது, கீழ்த் திசையில் குளிர்மதி எழுகிறது. சற்று நேரத்தில் அம் மதியின் அமுதக் கதிர்கள் தன் ஒளியைப் பரப்பி மக்கள் மனத்தை மகிழ்வித்து, பயிர்கள், மூலிகைகள் வளர உதவும்; மேல் திசையில் உள்ள இரத்தக் கறை யும் நீங்கும். மதி ஞாயிற்றினின்று பெற்ற ஒளியே ஞாயிற்றால் உண்டான வெம்மையை நீக்க உதவுகிறது; வெப்பத்தால் வருந்திய மக்களை மகிழ்விக்கிறது.


ரசுராமனின் வீழ்ச்சியும் தசரத இராமனின் எழுச்சியும் ஒருங்கே நிகழ்ந்தன. ர. 11:82